கார்ல் மார்க்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 21:
 
=== வாழ்க்கைக்குறிப்பு ===
கார்ல் மார்க்சு, தற்போது செருமனியின்ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் [[புருசியா]]வில் [[ட்ரையர்]] நகரில் 1818 [[மே 5]]-ஆம் நாள் பிறந்தார். எப்போது எப்பொழுது கார்ல் மார்க்சின் தந்தை [[யூதர்|யூதரான]] '''ஹைன்றிச் மார்க்சு''' கிறித்தவராக மதம் மாறினார் என்ற சரியான தேதி தெரியவில்லை ஆனால் அவர் மார்க்சு பிறக்கும் முன்பே மதம் மாறிவிட்டார்<ref>[http://books.google.com/books?id=3KOyuSakn80C&printsec=frontcover&dq=Karl+Marx+by+WHEEN,+FRANCIS&hl=en&sa=X&ei=-j41T_uzDaSQsALWwOyXAg&ved=0CDoQuwUwAA#v=onepage&q=Karl%20Marx%20by%20WHEEN%2C%20FRANCIS&f=false Karl Marx by WHEEN, FRANCIS]</ref>. இவரின் தந்தை வசதி படைத்த [[வழக்குரைஞர்]], கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான [[முனைவர் பட்டம்|முனைவர் பட்டத்தினைப்]] பெற்றார்.
 
1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். [[கொலோன்]] நகரில் ''ரைனிஷ் ஸைத்துங்'' எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே [[பாரிசு]] சென்றார். அங்கு 1844-ல் [[பிரெட்ரிக் ஏங்கல்சு|பிரெடரிக் ஏங்கல்சைச்]] சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கார்ல்_மார்க்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது