"சோயா அவரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

661 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சோயா அவரையின் மேலோடு (hull) கடினமானது, தண்ணீர் உட்புகமுடியா பண்புடையது. மேலும் உள்ளிருக்கும் வித்திலைகள் முளைக்குருத்து போன்றவை பாதிக்கப்படாத வகையில் மூடிப் பாதுகாக்கிறது. விதை உறை சேதமடைந்தால் அவ்விதையானது முளைப்பதில்லை.விதை உறையின் குழிந்த பகுதியில் சிறு கண் போன்ற வித்துத்தழும்பு (hilum) (கருப்பு, பழுப்பு, சாம்பல், மஞ்சள்,வெளிர் மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படலாம்) காணப்படுகிறது. வித்துத்தழும்பின் இறுதியில்
விதையுறையில் வளர்துளை அல்லது சிறு துளை காணப்படுகிறது.இது தன் வழியே நீரானது உள்ளே செல்ல அனுமதிக்கிறது இதன் பின்னர் விதை முளைக்கிறது.குறிப்பிடத்தக்க அம்சமாக சோயா அவரையின் உலர் விதைகள் அதிகப்படியான புரதச்சத்தைக் கொண்டிருக்கின்றன.இது அதிகப்படியான நாட்கள் உயிருடன் பிழைத்திருக்க ஏதுவாக இருக்கிறது. சரியான அளவு தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் விதையானது முளைக்கத் தொடங்குகிறது.
 
 
3,853

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298666" இருந்து மீள்விக்கப்பட்டது