கண் (உடல் உறுப்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படத்தின் புதிய பதிப்பு
வரிசை 27:
 
நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி-retina), [[ஆடி]] ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்திச் செய்யப்படுகின்றன.
 
கண்ணின் வழியே ஒளி செல்லும்போது ஒளிச் சிதறலும் ஒளித்திசை மாறுதலும் ஏற்படுகின்றன. ஒளியானது விழித்திரையை அடையும் முன் கார்னியா, லென்சின் முன்பகுதி, லென்சின் பின்பகுதி ஆகிய மூன்று பரப்புகளில் ஒளிச்சிதறல் அடைகிறது. கார்னியா மற்றும் லென்சுக்கு இடையில் அக்குவசு இயூமர் என்ற பிளாசுமா போன்ற திரவம் உள்ளது<ref name="healthline">{{cite web|title=
Vitreous and Aqueous Humor|url=http://www.healthline.com/human-body-maps/eye-vitreous-and-aqueous-humor#seoBlock}}</ref>. லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையில் விட்ரசு இயூமர் என்ற திரவம் உள்ளது. இது கூழ்மமான மீயூக்கோ புரதத்தினாலானது<ref name=Ali&Klyne1985>{{harvnb|Ali|Klyne|1985|page=8}}</ref>. இத்திரவங்கள் இரண்டும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதினால் ஒளி கண்ணின் விழித்திரையை தடையில்லாமல் அடைகிறது.
 
மனிதனின் கண்ணில் உள்ள லென்சின் குவிந்த பகுதி பார்க்கும் பொருளின் தூரத்திற்கு ஏற்ப தானே குவித்தன்மையை மாற்றிக் கொள்ளும் தன்மையை கொண்டிருக்கிறது. இத்தன்மையை கண் தக அமைதல் அல்லது விழியின் ஏற்பமைவு என்பர். இவ்வேற்பமைவு, சிலியரி தசைகள், சிலியரி உறுப்புகள், மற்றும் தாங்கும் இழைகளால் நடைபெறுகிறது.
 
கண் தூரத்திலுள்ள பொருளைப் பார்க்கும்போது சிலியரித்தசைகள் தளர்ந்து விடுகின்றன. பொருளிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மேல் குவிக்கப்படுகின்றன. எனவே தெளிவான பிம்பம் தெரிகின்றது. பொருளை விழியின் அருகில் கொண்டு வரும்போது விழியின் ஏற்பமைவுத் தன்மை அதிகரிப்பதில்லை. மாறாக லென்சின் மேற்பகுதியின் வளைவுப்பகுதி அதிகரிப்பதினால் ஒளிச்சிதறல் தன்மை அதிகரிக்கிறது. இதனால் அருகிலுள்ள பொருட்களின் பிம்பம் நன்றாகத் தெரிகிறது<ref>{{cite web|title=Human eye|url=http://www.britannica.com/EBchecked/topic/1688997/human-eye|publisher=Encyclopædia Britannica|accessdate=20 November 2012}}</ref>.
 
கண்ணின் குச்சி செல்களின் வெளிப்புறப்பகுதியில் காணப்படும் சிவப்புக் கலந்த ஊதா நிறமி, ரெடாப்சின் அல்லது பார்வை ஊதா என்று அழைக்கப்படுகிறது. இதிலுள்ள புரத ஆப்சினும் ஆல்டிகைடும் கலந்த வைட்டமின் ’ஏ’ வும் சேர்ந்த பகுதியினை ரெட்டினோ என்கிறார்கள்<ref name="Perception_2008">{{citation | author = Perception | title = Guest Editorial Essay | edition = | publisher = Perception | location = | year = 2008 | origyear = | pages = 1 | quote = | isbn = | chapter = | doi = | url = | accessdate = }}</ref>. ஒளி ரெடாப்சின் மீது விழும்போது நிறமற்றுப் போகிறது. ஏனென்றால் இவை ரெட்டினே மற்றும் ஆப்சினாக உடைக்கப்படுகின்றன. ஒளி இல்லாத வேளையில் இவை மீண்டும் இணைகின்றன. குச்சி செல்கள் அதிக ஒளி உணர்வுத் தன்மை கொண்டவையாகும். எனவே குறைந்த ஒளியிலும் பார்ப்பதற்கு இவை உதவுகின்றன.<ref name="Stuart_1996">{{cite book |vauthors=Stuart JA, Brige RR | editor = Lee AG | title = Rhodopsin and G-Protein Linked Receptors, Part A (Vol 2, 1996) (2 Vol Set) | edition = | publisher = JAI Press | location = Greenwich, Conn | year = 1996 | origyear = | pages = 33–140 | quote = | isbn = 1-55938-659-2 | chapter = Characterization of the primary photochemical events in bacteriorhodopsin and rhodopsin | doi = | url = | accessdate = }}</ref>.
 
கூம்பு செல்களில் காணப்படும் பார்வை நிறமிகள் ரெட்டினேவுடன் சேர்ந்த புரத ஆப்சின்களால் ஆனவையாகும். கூம்பு செல்கள் நிறங்களை உணர்கின்றன<ref>{{cite web |url = http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/vision/rodcone.html |title = The Rods and Cones of the Human Eye }}</ref>. மனிதனின் கண்களில் வெவ்வேறு அலைநீளம் கொண்ட மூண்று நிறமிகள் காணப்படுகின்றன. அதிக அளவு ஒளிகொண்ட பார்வையின் செயலே நிறப்பார்வை எனப்படுகிறது. அதிக அளவு ஒளியின் நிறங்களை விழித்திரையிலுள்ள குச்சி செல்கள் இல்லாத போவியா பகுதி உணர்கிறது. குறைந்த ஒளி எனில் குச்சி செல்களும் அதிக ஒளி எனில் கூம்பு செல்களும் செயல்படுகின்றன. குச்சிசெல்கள் செயல்படும்போது நிறங்கள் உணரப்படுவதில்லை.
 
விழித்திரையின் செயல்பாட்டில் ஒளிவேதிவினை மூலமாக ஒளிச்சக்தியானது நரம்புத் தூண்டலாக மாற்றப்படுகிறது. இச்செயல் மூலம் நரம்பிழைகள் தூண்டப்பட்டு கடத்தப்படுகின்றன. உணர் உறுப்புகளில் உருவாகும் தூண்டல்கள் கூம்பு செல்களில் உருவாகும் மின்னழுத்தத்தைப் பொறுத்து மூளையினால் சரியாக நிறமாகப் பகுக்கப்படுகிறது.
 
==கண்ணின் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கண்_(உடல்_உறுப்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது