விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
 
===மின்காந்த விசை===
 
மின் மற்றும் காந்த பொருட்களின் மீது உண்டாகும் விசை [[மின்காந்த விசை]]யாகும்.
எலக்ட்ரான்கள் போன்ற இரு மின்னூட்டத் துகள்களுக்கிடையே அல்லது
மின்னோட்டம் நிகழும் இரு கடத்திகளுக்கிடையே செயல்படுவது மின்காந்த
விசையாகும். இது, வேறின மின்னூட்டங்களுக்கு கவர்ச்சி விசையாகவும், ஓரின
மின்னூட்டங்களுக்கு விலக்கு விசையாகவும் இருக்கும். மின்காந்த விசை, எதிர்த் தகவு
இருமடி விதிக்கு உட்படுகிறது. ஈர்ப்பியல் விசையுடன் ஒப்பிடும்போது, இவ்விசை
மிக்க வலிமையுடையதாக இருக்கிறது. நிலை மின்னியல் மற்றும் காந்த விசைகளின்
தொகுப்பே மின்காந்த விசையாகும்.
 
 
===ஈர்ப்பு விசை===
 
உலகில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது
ஈர்ப்பு விசையாகும். இவ்விசையானது, பொருள்களின் நிறைகளைச் சார்ந்த கவர்ச்சி
விசையாகும். நியூட்டனின் ஈர்ப்பு விதிப்படி, ஈர்ப்பு விசையானது, நிறைகளின்
பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு
எதிர்த்தகவிலும் இருக்கும். அடிப்படை விசைகளில், ஈர்ப்பு விசையே மிகவும்
வலிமை குன்றிய விசையாகும். ஆனால், உலகில் நெடுந்தொலைவிற்குச்
செயல்படக் கூடியது. மற்ற விசைகளைப் போல் அல்லாமல், பொதுவாக அனைத்துப்
பருப்பொருள்களிலும், ஏன், ஆற்றலிலும் செயல்படக்கூடிய ஒரு கவர்ச்சி விசையாக
இவ்விசை இருக்கிறது.
 
இரு பொருட்கள் அவற்றின் திணிவுகளின் பெருக்கத்துக்கு விகிதசமமாக ஒன்றுக்கொன்று ஏற்படுத்தும் விசை [[ஈர்ப்பு விசை]]யாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது