"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
”கிறிஸ்து”, “கிறித்து” - ஒரு கருத்து
சி (”கிறிஸ்து”, “கிறித்து” - ஒரு கருத்து)
[[File:Madras Christian college Chennai - gate.jpg|200px|thumb|right|சென்னை கிறித்துவக் கல்லூரி]]
{{ping|AntanO}}, கிறித்தவம், கிறித்துவம் போன்ற சொற்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்துவதற்கு முன்பே புழக்கத்தில் உள்ளன. கிறித்தவர்களும் கிறித்தவ நிறுவனங்களும் பயன்படுத்துகிறார்கள். இது தமிழ் விக்கிப்பீடியா திணித்த சொல் அன்று. இது தொடர்பாக கூடுதல் தரவுகள், சான்றுகள் வேண்டும் எனில், அவற்றைத் திரட்டுவதற்குப் போதிய கால அவகாசம் வேண்டும். பவுல் போன்ற துறை அறிஞர்களிடம் கருத்து கோரியுள்ளோம். புழக்கத்தில் உள்ள கிரந்தம் தவிர்த்த சொல்லைப் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லையெனில் அச்சொல்லுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். பல முதல்நிலை, இரண்டாம் நிலை தரவுகளில் கிறிஸ்து என்றுள்ளதை யாரும் இங்கு மறுக்கவில்லை. அதே வேளை, கிறித்து என்று எழுதுவது ஏன் தமிழ் விக்கிப்பீடியா மொழிநடைக்கு உள்ளிட்டு ஏற்புடையது என்பதனையும் போதுமான அளவு விளக்கியுள்ளோம். இதில் சமயச் சாய்வு இல்லை. எனவே, விவிலியத்தில் உள்ளது போல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதாதது அச்சமயத்தை அவமதிப்பது போலாகும் என்பது ஏற்புடைய கருத்தன்று. நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 21:05, 4 சூன் 2017 (UTC)
 
=="கிறிஸ்து”, “கிறித்து” - ஒரு கருத்து==
தவிர்க்க முடியாத காரணங்களால் த.வி.யில் நீண்ட காலமாக என் பங்களிப்புகள் குறைவாகவே இருந்துள்ளன. வருந்துகிறேன். எனினும், இரவி என்னிடம் கருத்துக் கேட்டமையால் இப்பதிவு.
 
பயனர்கள் பலர் சிறப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு கருத்துப் பற்றியும் விரிவாக எழுதத் தேவையில்லை என்று முடிவுசெய்தேன். சுருக்கமாக:
 
1) கிரந்த எழுத்துப் பயன்பாடு பற்றி த.வி.யின் பொதுக்கொள்கை எனக்கு ஏற்புடையதே. “இயன்ற மட்டும்” என்று வரையறுப்பதும் ஏற்புடையதே.
 
2) நான் “கிறித்தவம்” என்று இதுவரை எழுதி வந்துள்ளேன். சிலர் இதைக் “கிறித்துவம்” என்றும் கூறுவர். இது எழுத்துத் தமிழ். ஆயினும் பொதுவான பேச்சுத் தமிழிலும், கிறித்தவர்களின் மறையுரைகளிலும் “கிறிஸ்தவம்”, “கிறிஸ்துவம்” என்ற சொற்களே மிகப் பெரும்பான்மையாகப் பயன்பாட்டில் உள்ளன.
 
3) “கிறிஸ்து” என்ற சொல்லை “இயன்ற மட்டும்” மாற்றாமல் விட்டுவிடுவது நன்று. இதற்கான அடிப்படைக் காரணம், 1995ஆம் ஆண்டு கிறித்தவ சபைகள் ஒன்று சேர்ந்து, தற்காலத் தமிழில், இயன்றவரை கிரந்தம் தவிர்த்து, வடமொழிச் சொல்லாடலை ஒதுக்கிவிட்டு, “அவன்”, “அவள்” என்னும் சொற்களுக்குப் பதில் “அவர்” என்று மரியாதைப் பன்மைப் பயன்படுத்தி, மதுரை மாநகரில் வெளியிட்ட “திருவிவிலியம்” (பொது மொழிபெயர்ப்பு) இதுவரை வெளிவந்த மொழிபெயர்ப்புகளுள் தலைசிறந்ததாக அமைந்துள்ளதும், அம்மொழிபெயர்ப்பு Christos, Christus, Christ என்று முறையே கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வழங்கப்படுகின்ற சொல்லைக் “கிறிஸ்து’ என்று மொழிபெயர்த்துள்ளதும் ஆகும். இச்சொல் கிறித்தவ சமயத்திற்கு அடிப்படையான ஒன்று என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.
 
எனவே, “கிறிஸ்து” என்ற சொல்லை அவ்வாறே தருதல் கிறித்தவர்களுக்குப் பெரிதும் ஏற்புடையதாகும்.
 
4) தேடுபொறிப் பயன்பாடு பற்றிய நுட்பங்களை விரிவாக அறியாத எனக்கு அதுபற்றித் தனிக் கருத்து இல்லை. இருப்பினும், “கிறிஸ்து” (”கிறித்து”), “கிறிஸ்தவம்” ( “கிறித்தவம்”), “கிறிஸ்துவம்” (”கிறித்துவம்”) என்று மாற்றுச் சொற்கள் கொடுக்க தேடுபொறியால் முடியும் என்றால் அதை அறிமுகப்படுத்தலாம்.
 
5) த.வி.யின் “விக்கிமூலத்தில்” தமிழ் விவிலியம் முழுவதையும் பதிவு செய்தேன். அங்கு தமிழ் விவிலியத்தின் பாடம் அச்சுப் பதிப்பில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே தரப்பட்டுள்ளது. எனவே, அங்கு “கிறிஸ்து” என்ற சொல் வருமே ஒழிய “கிறித்து” வராது. எனவே, தேடுபொறியில் “கிறித்து” என்று மட்டுமே கொடுப்பதாக இருந்தால், ”கிறிஸ்து” என்ற விவிலிய பாடம் அங்கு தோன்றாமலே போய்விடும் நிலை ஏற்பட்டுவிடும். அது சரியாகாது.
 
6) கிறித்தவத்தில் வழங்குகின்ற பிற சிறப்புப் பெயர்ச்சொற்களையும் வலிந்து திரிக்காமல் விட்டுவிடுவதே நன்று. விவிலியப் பெயர்கள் பெரும்பாலும் எபிரேயம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளினின்று பிறந்தவை. சில பெயர்கள் கிறித்தவ வரலாற்று வழக்கத்தில் குறிப்பிட்ட வடிவம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, யோசேப்பு, யாக்கோபு, யூதா போன்றவற்றைக் காட்டலாம். இவற்றிற்கு முன் “இ” எழுத்தை இடுவது முறையாகாது. “இயேசு” என்ற சொல் கிறித்தவர்களிடையேயும் தமிழ் விவிலியத்திலும் உள்ள சொல். அதை “ஏசு” என்றோ “யேசு” என்றோ எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். தேடுபொறியில் அச்சொற்களை மாற்றுச் சொற்களாகத் தரலாம். ஏனென்றால் பலர் அச்சொல் வடிவங்களைக் கையாளுகிறார்கள்.--[[பயனர்:George46|பவுல்-Paul]] ([[பயனர் பேச்சு:George46|பேச்சு]]) 00:36, 5 சூன் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2299722" இருந்து மீள்விக்கப்பட்டது