காரைக்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
காரைக்கால் மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி கொடுக்கப்பட்டதாகும். அப்போது பிரஞ்சு கவர்னராக இருந்தவர் துய்மா அவர்கள். பிற்பாடு கவர்னராக இருந்த டூப்லெக்ஸ் காரைக்காலை சுற்றியுள்ள சில ஊர்களை விலைக்கு வாங்கி இந்த ஊரை விரிவாக்கம் செய்தார்.
இதை பிரஞ்சியர் சாதிக்க முக்கிய காரணமாக இருந்தவர், பிரஞ்சியரிடம் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார் ( இவருடைய பாட்டனார் தானப்ப முதலியாரால் பிரஞ்சியருக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டதுதான் புதுச்சேரி மாநிலமாகும்.) இவருடைய புத்தி கூர்மையான யோசனைகளால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது.
==நிலவியல்==
=== இருப்பிடம் ===
காரைக்கால் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும், இது முன்னர் பிரெஞ்சு இந்தியாவின் பகுதியாக இருந்தது. புதுச்சேரி, யானம் மற்றும் மஹே போன்ற பிற முன்னாள் பிரஞ்சு பிரதேசங்களுடன் சேர்ந்து புதுச்சேரி ஒன்றியத்தை உருவாக்குகிறது.
=== பிரிவுகள் ===
காரைக்கால் நகரம் நாகப்பட்டினத்திலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) வடக்கிலும் மற்றும் தரங்கம்பாடியிலிருந்து 12 கிலோமீட்டர் (7.5 மைல்கள்) தெற்கே அமைந்துள்ளது, இது காரைக்கால் மாவட்ட தலைமையகம் ஆகும்.
 
காரைக்கால் மண்டலம் காரைக்கால் நகராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களால் உருவாக்கப்பட்டது.அவை:
* நெடுங்காடு
* கோட்டுச்சேரி
* நிரவி
* திருநள்ளாறு
* திருமலைராயன் பட்டினம்
* பூவம்
* வரிச்சிக்குடி
=== நதிகள் ===
குடமுருட்டி, அரசலாறு, வீரசோழனார் மற்றும் விக்ரமனார் ஆகியவை காவேரி ஆற்றின் முக்கிய கிளை நதிகள் ஆகும்.காரைக்கால் பகுதி வழியாக அரசலாறும் அதன் கிளைகளும் பரவி இருந்தாலும், குடமுருட்டி மற்றும் வீரசோழனார் ஆகியவற்றின் நீர்த்தேக்கங்களும் அப்பகுதியின் பாசன தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
==காரைக்கால் அம்மையார்==
காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார்.
 
இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.இவருக்கென காரைக்கால் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.
==மாங்கனித் திருவிழா==
காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் அம்மையார் கோயில் சார்பாக மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது