தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
சிதைவுக் கட்டத்தில் இருள் ,பனிக்காலம்,பேரிடர்கள்,மீீள் வருகை,தலைவனின் தோல்வி போன்ற உட்பண்புகள் உள்ளன.இதன் தொல் படிமமாக எள்ளல் இலக்கியம் காணப்படுகிறது.பேய்,பிசாசு,சூனியக் காரர் ஆகியோர் இதன் துணைமாந்தர்களாக உள்ளனர்.
 
== தொன்மம் உருவாவதற்கான காரணங்கள் ==
 
தொன்மம் ஒரு தலைவனை முன்னிறுத்தி உருவாக்கப்படுகிறது.அத்தலைவன் ஏதேனும் ஒரு புதுமையை நிறுவியவனாக இருப்பது வழக்கம்.பலவகைப்பட்டதாக அது காணப்படும்.
 
=== காலப் புதுமை ===
திருவள்ளுவர், புத்தர்,இயேசு கிறிஸ்து, முகமது நபி முதலானோர் இந்த உலகின்மீது தாக்கத்தைத் தோற்றுவித்தவராவர்.இவர்கள் மனித குல வரலாற்றில் புதுமைப் படைத்தவர்கள்.ஆதலால், இத்தகையோரை மையப்படுத்தி பல்வேறு தொன்மவியல் உருவாகியது.
 
=== சமயப் புதுமை ===
சமணம், பௌத்தம்,சைவம், வைணவம், கிருத்துவம்,இஸ்லாம் ,சீக்கியம் முதலான சமயங்களின் எழுச்சி மனித வாழ்க்கையை மாற்றியமைத்தது.இச்சமயங்களைத் தோற்றுவித்தோரின் வாழ்வையும் அடியார்களின் வாழ்க்கையையும் ஒட்டிப் பல்வேறு தொன்மங்கள் உருவாக்கப்பட்டன.
 
=== புது நகரங்கள் ===
விஸ்வகர்மா, மயன் ஆகியோர் முறையே நிறுவிய புதிய நகரங்களான திரிகூடாசலம்,இந்திரப் பிரஸ்தம் ஆகியவை தொன்மங்களாக ஆக்கப்பட்டுள்ளன.
 
=== புதிய வாழ்வியல் முறை ===
புதிய வாழ்க்கை முறையும் அதனைத் தோற்றுவித்தோரும் பிற்காலத்தில் தொன்மங்களாக உருவாகின்றனர்.எடுத்துக்காட்டாக சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், வழிபடு தெய்வமாகப் பின்பற்றப்படுகிறார்.
 
=== புத்துணர்வூட்டும் சூழ்நிலை ===
புத்தாக்க வாழ்க்கை முறைக்கு அடிகோலிய இடம்,சூழல்,மனிதர் ஆகியோர் தொன்ம உருவாக்கத்திற்குக் காரணமாகின்றனர்.உதாரணத்திற்கு புத்தர் ஞானம் பெற்ற போதிமரம்,இயேசுவின் தீக்கை(Baptism),மோசஸ் மலை உச்சியும் சட்டத் தொகுப்பும்(Table of Laws),கிரேக்கப் பெருநகரங்கள் உருவாக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கவியலும்.
 
[[பகுப்பு:பண்பாட்டு மானிடவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது