தெகுரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 199:
== ஷாப்பிங் ==
தெஹ்ரான் பாரம்பரிய பஜாரில் இருந்து நவீன ஷாப்பிங் மால்கள் வரை பல்வேறு வகையான ஷாப்பிங் மையங்களைக் கொண்டுள்ளது. தெஹ்ரானின் கிராண்ட் பஜார் மற்றும் தாஜ்ரிஷ் பஜார் தெஹ்ரானில் மிகப்பெரிய பழைய பஜார்கள் ஆகும்.நகரத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பெரும்பாலான சர்வதேச வர்த்தக முத்திரை கடைகள் மற்றும் உயர்வர்க்க கடைகளும் அமைந்திருக்கின்றன, மீதமுள்ள ஷாப்பிங் மையங்களும் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. தெஹ்ரானின் சில்லறை வணிகம் பல புதிதாக கட்டப்பட்ட மால்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களுடன் வளர்ந்து வருகிறது.
== சுற்றுலா ==
தெஹ்ரான் ஈரானில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும், இது பல கலாச்சார அம்சங்களை கொண்டுள்ளது.கோலஸ்டன், சதாபாத் மற்றும் நியாவரன் வளாகங்கள் உட்பட நாட்டிலுள்ள கடைசி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அரச வளாகங்கள் இங்கு காணப்படுகின்றன.தெஹ்ரான் உலகின் பெரிய நகை தொகுப்பாக இருக்கும் என கருதப்படும் ஈரானிய பேரரசைச் சார்ந்த அரச ஆபரணங்களின் வீடாக இருக்கிறது. இந்நகைகள் ஈரானின் மத்திய வங்கியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.தெஹ்ரான் சர்வதேச புத்தக கண்காட்சி ஆசியாவில் மிக முக்கியமான புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தெகுரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது