"தெகுரான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,196 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
== சுற்றுலா ==
தெஹ்ரான் ஈரானில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும், இது பல கலாச்சார அம்சங்களை கொண்டுள்ளது.கோலஸ்டன், சதாபாத் மற்றும் நியாவரன் வளாகங்கள் உட்பட நாட்டிலுள்ள கடைசி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அரச வளாகங்கள் இங்கு காணப்படுகின்றன.தெஹ்ரான் உலகின் பெரிய நகை தொகுப்பாக இருக்கும் என கருதப்படும் ஈரானிய பேரரசைச் சார்ந்த அரச ஆபரணங்களின் வீடாக இருக்கிறது. இந்நகைகள் ஈரானின் மத்திய வங்கியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.தெஹ்ரான் சர்வதேச புத்தக கண்காட்சி ஆசியாவில் மிக முக்கியமான புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும்.
== பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் ==
தெஹ்ரானில் 2,100 க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன, பழமையான பூங்கா ஜம்ஷெதியஹ் பூங்கா ஆகும். கஜர் இளவரசன் ஜம்ஷைத் தவலுக்காக ஒரு தனியார் தோட்டமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டது, பின்னர் ஈரான் கடைசி பேரரசான ஃபராஹ் டிபாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தெஹ்ரானுக்குள் இருக்கும் மொத்த பச்சை பகுதி 12,600 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது, இது நகரின் பரப்பளவில் 20 சதவீதத்திற்கும் மேலானதாகும்.தெஹ்ரானின் பூங்கா மற்றும் பசுமை வெளியிட சங்கம் 1960 இல் நிறுவப்பட்டது. நகரத்தில் நகர்ப்புற இயல்பைப் பாதுகாப்பதற்காக நிருவப்பட்ட சங்கம் இது. தெஹ்ரானின் பறவைகள் தோட்டம் ஈரானின் மிகப் பெரிய பறவை பூங்கா ஆகும். தேஹ்ரான்-கரஜ் எக்ஸ்பிரஸ்வேயில் அமைந்துள்ள ஒரு பூங்கா சுமார் ஐந்து ஹெக்டேர் பரப்பளவில் 290 வகையான உயிர்களைக் கொண்டுள்ளது.தெஹ்ரானில் நான்கு பூங்காக்கள் பெண்களுக்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
 
==மேற்கோள்கள்==
1,388

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2301002" இருந்து மீள்விக்கப்பட்டது