ஆம்ஸ்டர்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 84:
1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில், ஆம்ஸ்டர்டாம் அதன் மிகப்பெரிய மக்கள்தொகை சரிவை சந்தித்தது, 1985 ஆம் ஆண்டில் 675,570 குடியிருப்பாளர்கள் மட்டுமே இருந்தனர். இது விரைவில் மறு நகர்ப்புறமயமாக்கப்பட்டது, இது 2010 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட மக்கள்தொகை வளர்ச்சிக்கு வழிவகுத்தது.இதனால் ஆராய்ச்சி, தகவல் மற்றும் புள்ளிவிவரம் ஆகியவற்றின் நகராட்சித் துறை 2020 ஆம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சியில் ஒரு புதிய சாதனையை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது.
== கட்டிடக்கலை==
ஆம்ஸ்டர்டாம் ஒரு பெரும் கட்டிடக்கலை வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள மிகப்பழைய கட்டிடமான ஓடே கேர்க் (பழைய சர்ச்) என்பது வால்லேன்னின் பகுதியின் இதயத்தில் அமைந்துள்ளது, இது 1306 இல் பிரதிஷ்டை முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.ஆம்ஸ்டர்டாமில் உள்ள பழங்கால மர கட்டடம் பெகிஜின்ஹோஃப் பகுதியில் உள்ள ஹூட்டன் ஹூய்ஸ் என்பதாகும். இது சுமார் 1425 ஆம் ஆண்டு கட்டப்பட்டது மற்றும் இரு மரத்தாலான கட்டிடங்களில் ஒன்றாகும். இது ஆம்ஸ்டர்டாமில் கோத்திக்(Gothic) கட்டிடக்கலைக்கு சில எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். 16 ஆம் நூற்றாண்டில், மர கட்டிடங்கள் அழிக்கப்பட்டன அதற்கு பதிலாக செங்கல்கள் பயன்பாட்டிற்க்கு வந்தன.இந்த காலகட்டத்தில், பல கட்டிடங்கள் மறுமலர்ச்சி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டன.ஆம்ஸ்டெர்டாம் விரைவில் தனது சொந்த மறுமலர்ச்சி கட்டமைப்பை உருவாக்கியது. இந்த கட்டிடங்கள் கட்டட வடிவமைப்பாளர் ஹென்ட்ரிக் டி கெய்ஸரின் கொள்கைகளின்படி கட்டப்பட்டுள்ளன.ஹென்ட்ரிக் டி கெய்ஸர் வடிவமைத்த மிக உறைக்கத்தக்க கட்டிடங்களில் ஒன்றுதான் வெஸ்டர்க்கெர்க். 17 ஆம் நூற்றாண்டில் பரோக் கட்டிடக்கலை மிகவும் பிரபலமானது. இது கிட்டத்தட்ட ஆம்ஸ்டர்டாமின் கோல்டன் வயதுடன் ஒத்துப்போனது. ஆம்ஸ்டர்டாமில் இந்த பாணியில் முன்னணி வடிவமைப்பாளர்கள் ஜேக்கப் வான் கேம்பன், பிலிப்ஸ் விங்போன்ஸ் மற்றும் டேனியல் ஸ்டால்பேயிர்ட் ஆகியோர்.பிலிப் விங்போன்ஸ் நகரம் முழுவதிலுமுள்ள வியாபாரிகளின் வீடுகளை அற்புதமாக வடிவமைத்தார். ஆம்ஸ்டர்டாமில் பரோக் பாணியில் ஒரு பிரபலமான கட்டிடம் டாம் சதுக்கத்தில் கட்டப்பட்ட ராயல் அரண்மனை. 18 ஆம் நூற்றாண்டு முழுவதும், ஆம்ஸ்டர்டாம் பிரெஞ்சு கலாச்சாரத்தால் பெரிதும் பாதித்க்கப்பட்டது. 1815 ஆம் ஆண்டில், கட்டிடக் கலைகளில் பரோக் பாணியை முற்றிலுமாக கைவிட்டு வெவ்வேறு புதிய பாணிகளில் கட்டத் தொடங்கினர்.
== பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள் ==
ஆம்ஸ்டெர்டாம் நகரில் பல பூங்காக்கள், திறந்தவெளி இடங்கள் மற்றும் சதுரங்கள் உள்ளன. நகரில் உள்ள மிகப்பெரிய பூங்காவாக இருக்கும் வொண்டல்பெர்க், ஆட்-சூயிட் நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டின் ஆம்ஸ்டர்டாம் எழுத்தாளர் ஜொஸ்ட் வான் டென் வொண்டல் பெயரில் அமைக்கப்பெற்றது. ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் பார்வையாளர்களை இந்த பூங்கா கொண்டுள்ளது. பூங்காவில் ஒரு திறந்த வெளி திரையரங்கு, ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் பல ஹொர்கா வசதிகள் உள்ளன. சூயிட் நகரில், பீட்ரிக்ஸ்ஸ்பார்க், ராணி பீட்ரிக்ஸின் பெயரில் அமைக்கப்பெற்றது. ஆம்ஸ்டர்டாம்ஸே போஸ் (ஆம்ஸ்டர்டாம் வனம்), ஆம்ஸ்டர்டாமின் ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு இடம். ஆண்டுதோறும் சுமார் 4.5 மில்லியன் மக்கள் இந்த பூங்காவிற்கு வருகை தருகின்றனர், இது 1000 ஹெக்டேர் அளவுக்கு உள்ளது மற்றும் சென்ட்ரல் பார்கையும்விட மூன்று மடங்கு பெரிய இடத்தை உடைய வனம் இது ஆகும்.
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/ஆம்ஸ்டர்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது