பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பல்படி வேதியியல்''' (Polymer chemistry) [[வேதியியல்|வேதியியலின்]] உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இந்த பிரிவு [[நெகிழி|பிளாசுடிக்]], [[மீளும் தன்மையுடைய பொருட்கள்]] (elastomer)]] போன்ற பலபடி மூலக்கூறுகளின் [[வேதியியல் அமைப்பு]], [[வேதித்தொகுப்பு முறைகள்]] மற்றும் [[வேதியியல் பண்புகள்]] ஆகியவை குறித்து ஆழமாக விவரிக்கிறது. பலபடி வேதியியல் என்பது [[பல்படி இயற்பியல்]], [[பல்பகுதியப் பொறியியல்|பல்படி பொறியியல்]] ஆகியவற்றை உள்ளடக்கிய [[பல்படி அறிவியல்]] என்ற அகன்ற களத்தோடு தொடர்புடையதாக விளங்குகிறது.
 
 
 
[[எர்மேன் இசுடாடிஞ்சா்]] என்ற வேதியியலாளர் முதன்முதலாக பல்படிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி நீண்ட சங்கிலித்தொடர்களில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட அணுக்களைக் கொண்ட பெரும் மூலக்கூறுகள் என்பதே பல்படியின் முதல் வரையறையாக இருந்தது. அவருடைய ஆய்வானது பல்படிகளைப் பற்றிய வேதியியல்ரீதியான புரிதலை ஆழப்படுத்தியது. நியோப்ரீன், நைலான் மற்றும் பாலியெசுடர் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு பல்படி வேதியியல் இன்னும் விரிவடையத் தொடங்கியது எனலாம்.
IUPAC வரையறைப்படி பெரு மூலக்கூறுகள் (macromolecules) என்ற வார்த்தையானது தனித்த மூலக்கூறுகளின் சங்கிலித்தொடர் அமைப்பைக் குறிக்கும் சொல் என்றும், வேதியியலோடு தொடர்புடையது எனவும் விளக்கமளிக்கப்பட்டது. <ref>{{cite web|url=http://old.iupac.org/reports/1996/6812jenkins/molecules.html#1.1|title=Macromolecule|publisher=[[IUPACபன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]]|accessdate=2011-09-05}}</ref><ref>{{cite web|url=http://old.iupac.org/reports/1996/6812jenkins/substances.html#2.2|title=Polymer|publisher=[[IUPACபன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]]|accessdate=2011-09-05}}</ref>. பல்படிகள் எனப்படுபவை பல்படிப் பொருட்களின் பண்புகளைப் பற்றி குறிப்பிடுவதாகவும், இயற்பியலின் உபபிரிவான பல்படி இயற்பியலுக்குத் தொடர்புடைய வார்த்தை எனவும் விளக்கப்படுகிறது.
== பல்படிகள் மற்றும் அவற்றின் பண்புகள் ==
[[பல்படி]]கள் எனப்படுபவை [[தனித்த ஒற்றை மூலக்கூறுகளின்]] [[பலபடியாதல்]] வினையின் காரணமாக உருவான அதிக மூலக்கூறு நிறையைக் கொண்ட சேர்மங்கள் ஆகும். ஒரு பலபடியின் அமைப்பில் மீண்டும், மீண்டும் வருகின்ற தனியான வினைபடு மூலக்கூறே ஒற்றை மூலக்கூறு (monomer) எனப்படுகிறது. ஒரு [[பல்படி]] என்பது வேதியியல்ரீதியாக, [[பலபடியாதலின் அளவு]], [[மோலார் நிறை பரவல்]], [[இழுவைத்திறன்]], [[கூட்டு பல்படி]] பரவல், [[பக்கத்தொடர் இணைப்பின் அளவு]], பல்படியின் [[இறுதி தொகுதிகள்]], [[குறுக்குப் பிணைப்புகள்]], [[படிகத்தன்மை]] மற்றும் வெப்பவியல் பண்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. கரைசலில் உள்ள பல்படிகள் [[கரைதிறன்]],[[பாகியல் தன்மை]] மற்றும் [[பசையாதல்]] ஆகியவை தொடர்பான சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பலபடி_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது