நாலுகெட்டு வீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
[[Image:paliam naalukettu.jpg|thumb|200px|right|[[கொச்சி|கொச்சியில்]] ஒரு நாலுகெட்டு வீடு]]
'''நாலுகெட்டு வீடு''' (நாலுகட்டு வீடு) {{audio|Naalukettu.ogg|pronunciation}} என்பது [[கேரளம்|கேரளத்தில்]] உள்ள மரபுவழி வீடுகளாகும். இத்தகைய வீடுகளை கேரளத்தின் [[திருச்சூர்]], [[ஆலப்புழா]], [[தலசேரி]] போன்ற இடங்களில் மிகுதியாக பார்க்கலாம். தாய்வழிச் சமூகத்தில் பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் பாரம்பரிய வீடாகும். இவ்வகை வீடுகள் [[கேரளம்|கேரளத்தில்]] காணப்படுகின்றன. நாலுகெட்டு வீடு, நான்குபுறமும் சதுர வடிவில் கட்டப்பட்டு நடுவில் வானவெளியான [[முற்றம்]] கொண்டு நான்கு அறைகள் கொண்ட செவ்வக வடிவ வீடாகும். இதற்குநடுமுற்றத்தில் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதன் நடுவில் துளசி மாடம் இருக்கும். வீட்டின் உள்கட்டமைப்பு பாரம்பரியம் மாறாமல் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது வீட்டின் சிறப்பு ஆகும். முன்பகுதியில் விருந்தினர்கள் அமர்வதற்காக மரப் பலகையால் ஆன இருக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வீட்டிற்கு நான்கு புறமும் வாசல் அமைப்பதும் உண்டு. இந்த நான்கு சதுர பகுதிகளும் வடக்கினி, தெக்கினி, கிழக்கினி, படிஞ்ஞாற்றினி (மேற்குத் தொகுதி) என அழைக்கப்படுகின்றன. நாலுகெட்டு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூசை அறை அமைக்கப்பட்டிருக்கும். பூசை அறையில் சிலைகள் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டிருக்கும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/article9549129.ece | title=கேரளக் கட்டிடக் கலைகளின் தனித்துவம் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 பெப்ரவரி 18 | accessdate=19 பெப்ரவரி 2017 | author=விபின்}}</ref> இவ்வகை வீடுகள் பெரியக் கூட்டுக் குடும்பங்களுக்காக [[மருமக்கதாயம்|மருமக்கதாய]] முறையில் ஒரே கூரையின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் வாழப் பாரம்பரியமாக கட்டப்பட்டவை. வீட்டைச் சுற்றி வராந்தா இருக்கும். இந்த வராந்தா முழுவதையும் வளைவான மரப்பகுதி கொண்டு அழகாக்கப்பட்டிருக்கும். இதை ‘சாருபடி’ என அழைக்கிறார்கள். இவ்வாறான சாருபடி மரவேலைப்பாடு வீட்டை சுற்றியிருக்கும். வீட்டு உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு குளம் இந்த வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். இந்தக் குளத்துக்கு போவதற்கான பாதை இந்தச் சுற்று வராந்தாவிலிருந்து பிரிந்துசெல்லும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/article9723633.ece | title=நாலுகெட்டு வீடு | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 சூன் 10 | accessdate=10 சூன் 2017}}</ref>
 
இந்த வீடுகளைக் கட்டுவதில் ''தச்சு சாஸ்திரமும்'' பாரம்பரிய வாஸ்து முறையும் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தப் பாரம்பரிய அறிவு வளர்ந்து பாரம்பரியக் கட்டடக் கலையில் நான்கு கிளைகளாக உருவாயின. இந்த நான்கு கிளைகள் தந்திரசமுச்சயா, வாஸ்துவித்யா, மனுஷ்யாலயா-சந்திரிகா, சில்பரத்னா என்ற பெயர்களின் கீழ் அறியப்படுகிறன.
"https://ta.wikipedia.org/wiki/நாலுகெட்டு_வீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது