ஓவியக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சுதை ஓவியம்: *விரிவாக்கம்*
வரிசை 13:
 
===எண்ணெய் ஓவியம் (''Oil painting'')===
[[File:Honoré Daumier 008.jpg|thumb|left|Honoré Daumier (1808–79), ''ஓவியர்'' சட்டத்தில் இருக்கும் எண்ணெயில் தூரிகையினால் ஏற்படும் பார்வைக்குத் தெரியும் வரிகள் உள்ளன]]
எண்ணெய் ஓவியம் என்பது [[நிறமி]]களைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் ஒரு வகை ஓவியமாகும். ஆளிவிதை எண்ணெய் பொதுவாக பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் ஆரம்பகால நவீன ஐரோப்பாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. கசகசா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பொதுவாக இவ்வகை ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் ஆகும். இவ்வகை எண்ணெய்களை தேவதாரு (pine) மரத்தின் பிசின்கள் (resins) அல்லது அதிலிருந்து பெறப்படும் சாம்பிராணி ( frankincense) குங்கிலியம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து ''நெய்வனங்கள்'' (varnishes) தயாரிக்கப்படுகின்றன. அவை ஓவியத்திற்கு மெருகூட்டவும் பளபளப்பாக்கவும் பயன்படும் பொருளாகும். பயன்படுத்தப்படும் எண்ணெய்யை பொறுத்துக் காயும் நேரம், பழுப்படையும் தன்மை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்துவதும் உண்டு.
 
வரிசை 19:
 
===வண்ணக்கோல் (Pastel painting)===
[[படிமம்:Pastelkrijt.jpg|200px|thumb|right|இடது|வண்ணக்கோல்]]
வண்ணக்கோல் என்பது வண்ண நிறமித் தூள்கள் மற்றும் ஒட்டும் பொருளாலான குச்சி வடிவிலான ஓவிய ஊடகமாகும்.
எண்ணெய் வண்ணப்பூச்சுகள் உட்பட அனைத்து நிற கலை ஊடகங்களின் பூச்சுகளைப் போலவே ஓவியங்களில் பயன்படுத்தப்படும் நிறங்களை சமப்படுத்தவும், மங்கலான குறைந்த செறிவு பகுதிகளை காட்டவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.வண்ணக்கோல் பூச்சுகளின் விளைவு வேறு எந்தவொரு ஓவிய செயல்முறையையும் விட இயற்கையான உலர்ந்த நிறமிகளுடன் நெருக்கமாக ஒத்து இருக்கிறது<ref>Mayer, Ralph. The Artist's Handbook of Materials and Techniques. Viking Adult; 5th revised and updated edition, 1991. ISBN 0-670-83701-6</ref>.
 
===செயற்கை வண்ணக் கூழ்மங்கள் (Acrylic painting)===
[[File:Jungle Arc.jpg|thumb|rightleft|Ray Burggraf என்பவரால், 1998 இல், மரத்தில் செய்யப்பட்ட காட்டு வளைவு (''Jungle Arc'') என அழைக்கப்பட்ட வண்ணக்கூழ்ம ஓவியம்]]
செயற்கை வண்ணக் கூழ்மமானது விரைவாக உலரக்கூடிய [[வண்ணம்|வண்ண]] நிறமிகளைக் கொண்ட கூழ்ம வடிவிலான வண்ணமாகும். தண்ணீர் கொண்டு நீர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது ஆனால் காய்ந்த பின் எவ்வளவு [[தண்ணீர்]] , இந்தச் செயற்கை வண்ணக்கூழ்மத்துடன் அல்லது பசையுடன் சேர்க்கப்பட்டதோ அதைப்பொருத்து தண்ணீர் உட்புகா வண்ணம் நீர்த்தடைப் (water-resistant) பண்பை பெற்றுவிடுகிறது. முடிக்கப்பட்ட ''அக்ரலிக்'' ஓவியம் ஒரு நீர்வண்ணம் அல்லது எண்ணெய் ஓவியத்தைப் போல மற்ற ஊடகங்களைப் போலவோ அல்லது அதன் சொந்த தனித்துவமான சிறப்பியல்புகளுடன் கூடியதாகவோ இருக்கலாம்.எண்ணெய் ஓவியத்திற்கும் செயற்கை கூழ்ம ஓவியத்திற்கும் உள்ள நடைமுறை வேறுபாடு அதன் உலருதல் செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளும் கால அளவாகும்.
 
===நீர்வர்ணம் (Watercolor painting)===
[[File:Joseph Mallord William Turner 017.jpg|leftright|thumb|200px|<small>J.M.W.Turner என்பவரால், 1802 இல், நீர்வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட, இயற்கை நிலப்படம் ஒன்றைக் காட்டும் வண்ண ஓவியம்<small/>]]
[[நீர் வர்ணம்]] என்பது நீரைக் கரைப்பானாகக் பயன்படுத்தி வண்ணம் தீட்டப்படும் ஒருவகை வண்ண நிறமிகளடங்கிய ஊடகமாகும். மிகவும் பாரம்பரியமாக நீர் வர்ண ஓவியங்கள் காகிதங்களில் தீட்டப்படுகின்றன.அதுமட்டுமல்லாமல் ஓலை, மரப்பட்டை காதிதங்கள், தோல்கள், செயற்கைத் துணிகள் போன்ற பொருட்களும் நீர் வர்ண ஓவியம் வரையப் பயன்படுத்தப்படுகின்றன.கிழக்காசியாவில் நீர் வண்ண ஓவியங்களைத் தூரிகை ஓவியங்கள் அல்லது உருட்டோவியங்கள் என்றும் கூறுகின்றனர்.[[சீனா|சீன]] , [[கொரியா|கொரிய]] மற்றும் [[சப்பான்]] நாடுகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிற நீர் வண்ண ஓவியங்கள் மிகப்பெரும் செல்வாக்கோடு இன்றும் திகழ்கின்றன.இந்தியா, எத்தியோப்பியா நாடுகளிலும் இவ்வகை ஓவியங்கள் பாரம்பரியமாகக் வரையப்பட்டு வருகின்றன.
 
=== சுதை ஓவியம்===
[[File:Sigiriya, Wolkenmädchen 3.jpg|thumb|rightleft|சிகிரியா சுவரோவியங்கள்]]
ஒரு வகைச் சுண்ணாம்பினால் தீட்டப்படும் ஓவியம் [[சுதை ஓவியம்]] எனப்படுகிறது. இவ்வகை ஓவியங்கள் [[சுவர்]]கள், உட்கூரைகள் போன்ற நிரந்தரமான கட்டமைப்புக்கள் மீது தீட்டப்படுகிறது. [[இலங்கை]]யில் தம்புள்ள என்னும் இடத்தில் உள்ள [[சிகிரியா]] குன்றில் மேலேறும் வழிகளில் உள்ள பாறைச் சுவர்களில் இவ்வகை ஓவியங்கள் உள்ளன.<ref>{{cite web | url=https://sigiriyatourism.com/ | title=Sigiriya | accessdate=10 சூன் 2017}}</ref> அதேபோல் [[iந்தியா]]வில் உள்ள [[அஜந்தா குகைகள்|அஜந்தா குகைகளும்]] இவ்வகையான ஓவியங்களைக் கொண்டுள்ளன.<ref>{{cite web | url=https://www.khanacademy.org/humanities/art-asia/south-asia/buddhist-art2/a/the-caves-of-ajanta | title=The Caves of Ajanta | publisher=Khan Academy | accessdate=10 சூன் 2017}}</ref>
[[File:Ajanta dancing girl now and then.jpg|thumb|leftright|19 ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட நடனமாடும் பெண்களின் ஓவியம்<ref>Detail from this [http://collections.vam.ac.uk/item/O115444/copy-of-painting-inside-the-oil-painting-gill-robert/ painting in the V&A]</ref>]]
 
===மை ஓவியங்கள் (Ink Painting)===
[[File:Landscapes of the Four Seasons.jpg|thumb|rightleft|Sesshū Tōyō வால் 1486 இல் உருவாக்கப்பட்ட, நான்கு [[பருவ காலம்|பருவ காலங்களையும்]] காட்டக்கூடிய மை ஓவியம்]]
சில [[நிறமி]]கள் ([[:en:pigment]]) மற்றும் [[சாயம்|சாயங்கள்]] போன்றவற்றாலான [[திரவம்]] கொண்டு ஒரு [[படிமம்]], எழுத்துவடிவம், [[வடிவமைப்பு]] என்பவற்றைத் தீட்டலே மை ஓவியம் எனப்படுகிறது. இவை [[எழுதுகோல்]], [[தூரிகை]], இறகு எழுதுகோல் போன்றவை கொண்டு செய்யப்படலாம். மையானது நிறமி, சாயம், [[பிசின்]], [[உராய்வுநீக்கி]] (Lubricant), இரு திரவ/திரவ அல்லது [[திண்மம்|திண்ம]]/திரவ பதார்த்தங்களுக்கிடையில் [[மேற்பரப்பு இழுவிசை]]யைக் குறைக்கும் பரப்பியங்கி ([[:en:Surfactant]]), [[உடனொளிர்தல்]] போன்ற பல்வேறு வகைப் பதார்த்தங்களைக் கொண்ட சிக்கலான [[கரைப்பான்|கரைப்பானை]]க் கொண்டிருக்கும். இவை மையின் காவியாகத் தொழிற்படுவதுடன், மைக்குரிய அளவான பதம், நிறம், அசைவுத்தன்மை, தடிமன், மற்றும் உலர்கையில் அதற்குரிய சரியான தோர்றம் என்பவற்றைக் கொடுக்க உதவும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஓவியக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது