பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
== வரலாறு ==
1777 ஆம் ஆண்டில் [[என்றி பிராகோநாட்]] என்பவரின் ஆய்வுப்பணியும், 1846 ஆம் ஆண்டில் [[கிறிஸ்டியன் இசுகோன்பெயின்]] என்பவரின் ஆய்வுப்பணியும் [[நைட்ரோசெல்லுலோசு]] கண்டுபிடிப்பிற்கு உதவின. நைட்ரோசெல்லுலோசானது [[கற்பூரம் (camphor)|கற்பூரத்துடன்]] உடன் வினைப்படுத்தும் போது [[செல்லுலாய்டு]] உற்பத்திக்கு உதவியது. இவ்வாறு கிடைத்த செல்லுலோசை [[ஈதர்]] அல்லது [[அசிட்டோன்]] கொண்டு கரைக்கும் போது [[கொலோடியான்]] கிடைத்தது. கொலோடியானானது அமெரிக்க குடியுரிமைப் போரின் போது வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களை சுத்தப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. 1865 ஆம் ஆண்டில் முதன் முதலாக [[செல்லுலோசு அசிடேட்]] தயாரிக்கப்பட்டது.
 
1834 ஆம் ஆண்டில், [[பிரெட்ரிச் லுாடர்சுடார்ப்]] மற்றும் [[நேதனியேல் ஹேவர்டு]] தனித்தனியாக [[நெகிழி|நெகிழியைக்]] கண்டறிந்தனர். இயற்கை இரப்பருடன் ([[ஐசோப்ரீன்|பாலிஐசோப்ரீன்]]) கந்தகத்தை சேர்க்கும் போது அந்தப் பொருளானது பிசுபிசுப்பான ஒட்டக்கூடிய தன்மையிலிருந்து காக்கப்பட்டது. 1844 ஆம் ஆண்டு [[சார்லசு குட்இயர்]] இரப்பருடன் கந்தகத்தை வெப்பப்படுத்தி [[இரப்பர் பற்றவைப்பு]] கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காப்புரிமையைப் பெற்றார். [[தாமசு ஹேன்காக் (கண்டுபிடிப்பாளர்)]] இதே செயல்முறைக்காக 1843 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் காப்புரிமையைப் பெற்றார். 1884 ஆம் ஆண்டில் [[இலாரி டி சார்டோனெட்]] மறு ஆக்கம் செய்யப்பட்ட செல்லுலோசு அல்லது விசுகோசு, ரேயான் ஆகியவற்றிலிருந்து பட்டு இழைகளுக்கு பதிலியாக முதல் செயற்கை இழையைத் தயாரித்தார். ஆனால், அது எளிதில் தீப்பற்றக்கூடியதாக இருந்தது. <ref>{{cite web|url=http://www.plastiquarian.com/index.php?articleid=286|title=The Early Years of Artificial Fibres|publisher=The Plastics Historical Society|accessdate=2011-09-05}}</ref>
 
1907 ஆம் ஆண்டு [[லியோ பேக்லேண்டு]] [[பேக்கலைட்]] எனப்படும் முதல் தொகுப்பு முறை வெப்பத்தால் இறுகும் [[பீனால்]]-[[பார்மால்டிஹைடு]] வகை நெகிழியைக் கண்டுபிடித்தார். இதே காலகட்டத்தில், [[எர்மான் லியூசஸ்]] என்பவர் [[அமினோ அமிலம் N-கார்பாக்சிநீரிலி]] கள் மற்றும் கருக்கவர் பொருட்களின் வினை மூலமாக, அவற்றின் அதிக மூலக்கூறு நிறை கொண்ட விளைபொருட்களின் தொகுப்பு முறையைக் கண்டறிந்தார். ஆனால், அவரது நேரடி மேற்பார்வையாளராக இருந்த [[எர்மான் எமில் பிஷர்]] 6000 டால்டனுக்கு அதிகமான அளவிலான சகப்பிணைப்பு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று தெரிவித்து முன்வைத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக [[எர்மான் லியூசஸ்]] தனது ஆய்வினை அத்துடன் நிறுத்திக் கொண்டார். <ref>{{citation|title=Polypeptides and 100 Years of Chemistry of α-Amino Acid N-Carboxyanhydrides|first=Hans,R.|last=Kricheldorf|doi=10.1002/anie.200600693|journal=Angewandte Chemie International Edition|year=2006|volume=45|issue=35|pages=5752–5784|pmid=16948174}}</ref> 1908 ஆம் ஆண்டு [[ஜாக்யூசு பிராண்டென்பெர்ஜெர்]] என்பவர் [[செல்லோபோன்]] எனும் பலபடிச் சேர்மத்தை உருவாக்கினார். விசுகோசு ரேயான் இழைகளை அல்லது தாள்களை ஒரு அமிலத் தொட்டியினுள் பீய்ச்சி அடிப்பதன் மூலம் [[செல்லோபோன்]] கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{citeweb|url=http://inventors.about.com/od/cstartinventions/a/Cellophane.htm|title=History of Cellophane|publisher=about.com|accessdate=2011-09-05}}</ref>
 
செருமனி நாட்டைச் சேர்ந்த [[எர்மேன் இசுடாடிஞ்சா்]] (1881-1965) என்ற வேதியியலாளர், முதன்முதலாக பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி பலபடி என்பது நீண்ட சங்கிலித்தொடர்களில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட அணுக்களைக் கொண்ட பருமூலக்கூறு ஆகும். அவருடைய ஆய்வானது பலபடிகளைப் பற்றிய வேதியியல்ரீதியான புரிதலை ஆழப்படுத்தியது. அதற்கு முன்னதாக அறிவியலாளா்கள் பலபடிகள் என்பவை சிறு மூலக்கூறுகளின் தொகுதிகள் என்றும் அவைகளுக்கு குறிப்பிட்ட மூலக்கூறு நிறை கிடையாது என்றும் அவை பெயர் தெரியாத ஒரு விசையின் காரணமாக ஒன்றோடு ஒன்று சேர்ந்து உள்ளன என்றும் நம்பியிருந்தனர். 1953 ஆம் ஆண்டில் எர்மேன் இசுடாடிஞ்சருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் [[வாலசு கரோதர்சு]] என்பவர் முதல் தொகுப்பு முறை இரப்பரான நியோப்ரீனைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு பட்டு இழைக்கு பதிலியாக நைலானைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கரைசல்களில் பலபடிகளின் அமைப்பு ([[சமவாய்ப்பு முறை சுருள்]]) தொடர்பான பணிக்காக [[பவுல் ப்ளோரி]] என்பவர் 1974 ஆம் ஆண்டில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
 
தற்போது மிகுந்த எண்ணிக்கையிலான, [[கார்பன் இழை]]-[[ஈபாக்சி]], [[பாலிசுடைரீன்]]-[[பாலிபியூட்டாடையீன்]] (HIPS), [[அக்ரைலோநைட்ரைல்]]-[[பியூட்டாடையீன்]]-[[இஸ்டைரீன்]] (ABS), மற்றும் இதே போன்ற கூட்டுக்கலவைகளை உள்ளடக்கிய வணிகரீதியிலான பலபடிகள் கிடைக்கின்றன. இத்தகைய பலபடிகள் பல்வேறு பகுதிப்பொருட்களின் சிறப்பான குணங்களைப் பெற்று உயர் வெப்பநிலையில் வேலை செய்யத் தகுந்த தானியங்கி இயந்திரங்களின் உட்பாகங்களாக பயன்படுத்தப்படுகின்றன. பலபடித் தொழிற்துறையில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தும் கூட பல்கலைக்கழகங்கள் இதைப் பாடமாக கற்றுத் தருவதற்கும், இத்துறையில் ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் நீண்ட காலம் எடுத்துக்கொண்டன.
"https://ta.wikipedia.org/wiki/பலபடி_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது