தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
 
தொன்மைவியலானது மனிதனின் பகற்கனவில் உருவான கற்பனையன்று.உண்மையின் அடிப்படையிலேயே தொன்மங்கள் உருவாகின்றன.இதற்கு மனிதனின் உளப்பாங்கு அவசியமாக உள்ளது.மேலும்,தொன்மமாவது மனிதனின் இயல்புகளை வெளிக்காட்டுகிறது.மனிதனின் நிறைவேற்றிக் கொள்ள இயலாத ஆசைகளும் தொன்மங்களாக எழுகின்றன.எனவே,கனவுகளோடு தொன்மங்கள் ஒப்பிடப்படுகின்றன.கனவு தனிமனிதனுடையது;தொன்மம் குறிப்பிட்ட சமுதாயக் கனவாகும்.<ref>{{cite book | title=thonmam | publisher=செல்லப்பா பதிப்பகம்,மதுரை-1. | author=கதிர்.மகாதேவன் | year=2008 | pages=ப.30}}</ref>ஆதலால்,சமுதாயக் கனவுக் கூறுகளைத் தொன்மங்கள் தன்னளவில் கொண்டுள்ளன.வனதேவதைகளின் தொல் கதைகள் தொன்மைங்களைவிடவும் பழமைமிக்கவை.இவை நனவிலி மனத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
 
மனித ஆசையின் படிமங்களும் தொன்மங்களாகின்றன.இதற்கு ஓடிபஸ் தொன்மத்தை(Oedipus Myth) உதாரணமாகக் கொள்ளவியலும்.உளவியல் பகுப்பாய்வு முறையில்(Psycho-Analytical Theory) ஓடிபஸ் மனப்பிறழ்வு(Oedipus Complex) கொள்கையானது முக்கிய பங்கு வகிக்கிறது.இத்தொன்மத்தின் வழிநின்று சிக்மண்ட் ஃபிராய்டு,மன அழுத்தம் காரணமாக மனிதனின் இயல்பூக்க உணர்ச்சிகள் கனவுகளில் வெளிப்படுகின்றன என்று எடுத்துரைத்துள்ளார்.மேலும்,நரம்பு மண்டலத்தின் வரம்பு மீறிய அடையாள இயக்கமானது கனவுகளின்போது எதிரொலிக்கப் பெறுகின்றன என்றும் கூறியுள்ளார்.இக்கொள்கையானது இருவேறு கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.அதாவது ஆதரிப்போரும் உண்டு.மறுப்போரும் உண்டு.ஆயினும்,உளவியல் பகுப்பாய்வில் இதன் கருதுகோள்கள் இன்றியமையாதவையாகும்.இவ் ஒடிபஸ் மனப்பிறழ்வுக் கொள்கையையொட்டி,எலக்ட்ரா(Electra),மேடா(Meta),ஃபெயட்ரா(Phaedra)முதலான தொன்மங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
 
இவற்றுள் மேடா என்னும் கிரேக்கத் தொன்மம்,பெண்களின் உள்ளார்ந்த விடாப்பிடிப் போக்கை(Exclusive Possession in Women)வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.ஃபெயட்ரா எனும் தொன்மத்தில் தாய் தன் மகனிடம் கொள்ளும் தகாத உறவுமுறையின் விளைவை எடுத்துரைக்கின்றது.ஆதாம்,ஏவாள் தொன்மங்கள் இத்தகைய உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.ஈட்ன் தோட்டத்தில் ஆப்பிளை சுவைக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு மீறப்படும் நிகழ்வானது,மனிதனின் இயல்பூக்கத்தை வெளிப்படுத்துகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது