தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 73:
==தொன்மவியலின் அடிப்படைகள்==
 
தொன்மைவியலானது மனிதனின் பகற்கனவில் உருவான கற்பனையன்று.உண்மையின் அடிப்படையிலேயே தொன்மங்கள் உருவாகின்றன.இதற்கு மனிதனின் உளப்பாங்கு அவசியமாக உள்ளது.மேலும்,தொன்மமாவது மனிதனின் இயல்புகளை வெளிக்காட்டுகிறது.மனிதனின் நிறைவேற்றிக் கொள்ள இயலாத ஆசைகளும் தொன்மங்களாக எழுகின்றன.எனவே,கனவுகளோடு தொன்மங்கள் ஒப்பிடப்படுகின்றன.கனவு தனிமனிதனுடையது;தொன்மம் குறிப்பிட்ட சமுதாயக் கனவாகும்.<ref>{{cite book | title=thonmamதொன்மம் | publisher=செல்லப்பா பதிப்பகம்,மதுரை-1. | author=கதிர்.மகாதேவன் | year=2008 | pages=ப.30}}</ref>ஆதலால்,சமுதாயக் கனவுக் கூறுகளைத் தொன்மங்கள் தன்னளவில் கொண்டுள்ளன.வனதேவதைகளின் தொல் கதைகள் தொன்மைங்களைவிடவும் பழமைமிக்கவை.இவை நனவிலி மனத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
 
மனித ஆசையின் படிமங்களும் தொன்மங்களாகின்றன.இதற்கு ஓடிபஸ் தொன்மத்தை(Oedipus Myth) உதாரணமாகக் கொள்ளவியலும்.உளவியல் பகுப்பாய்வு முறையில்(Psycho-Analytical Theory) ஓடிபஸ் மனப்பிறழ்வு(Oedipus Complex) கொள்கையானது முக்கிய பங்கு வகிக்கிறது.இத்தொன்மத்தின் வழிநின்று சிக்மண்ட் ஃபிராய்டு,மன அழுத்தம் காரணமாக மனிதனின் இயல்பூக்க உணர்ச்சிகள் கனவுகளில் வெளிப்படுகின்றன என்று எடுத்துரைத்துள்ளார்.மேலும்,நரம்பு மண்டலத்தின் வரம்பு மீறிய அடையாள இயக்கமானது கனவுகளின்போது எதிரொலிக்கப் பெறுகின்றன என்றும் கூறியுள்ளார்.இக்கொள்கையானது இருவேறு கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.அதாவது ஆதரிப்போரும் உண்டு.மறுப்போரும் உண்டு.ஆயினும்,உளவியல் பகுப்பாய்வில் இதன் கருதுகோள்கள் இன்றியமையாதவையாகும்.இவ் ஒடிபஸ் மனப்பிறழ்வுக் கொள்கையையொட்டி,எலக்ட்ரா(Electra),மேடா(Meta),ஃபெயட்ரா(Phaedra)முதலான தொன்மங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
வரிசை 81:
இந்தியத் தொன்மத்தில் விழுமியக் கொள்கைக்கும் புலனுணர்ச்சி தன்முனைப்பிற்கும் இடையே எழும் முரணை அடிப்படையாகக் கொண்டது இராமாயணமும் மகாபாரதமும் ஆகும்.இராம,இராவண கொல்களமும்,அர்ச்சுன,துரியோதன செருகளமும் இங்கு உதாரணங்களாகும்.காமன் எரிப்பு,அகலிகை சாபம்,இந்திரனின் கொடுந்தோற்றம் முதலானவை இந்திய தொன்ம வளத்திற்கு சான்றுகளாவன.
 
மனிதனின் வாழ்க்கையில் தோன்றும் பாலுணர்ச்சியின்(Libido)விளைவும் மனநிலைப் பிறழ்வும் தொன்மங்களாக உருவெடுக்கின்றன என்பது அறிஞர் யுங் கொள்கையாகும்.<ref>{{cite book | title=தொன்மம் | publisher=செல்லப்பா பதிப்பகம்,மதுரை-1 | author=கதி.மகாதேவன் | year=2008 | pages=ப.33}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது