"கனிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,012 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
== கனிமவியல் வேதியியல் ==
கனிமங்களின் மிகுதித்தன்மை மற்றும் பல்வகைத் தன்மை அவற்றின் வேதியியல் தன்மையினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும், இதன் தொடர்ச்சியாக, புவியில் தனிமங்களின் மிகுதித்தன்மையையும் சார்ந்துள்ளன. தற்போது காணப்படும் பெரும்பான்மையான கனிமங்கள் புவியோட்டிலிருந்து பெறப்பட்டவையே. புவி ஓட்டில் இருக்கக்கூடிய மிகுதித்தன்மையின் காரணமாக கனிமங்களின் முக்கிய உறுப்புக்களாக எட்டு தனிமங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த எட்டு தனிமங்கள் எடை விகிதாச்சாரப்படி, புவி ஓட்டின் எடையில் 98% க்கும் அதிகமாக காணப்படுகின்றன. காணப்படும் எடை அளவின் இறங்கு வரிசைப்படி அந்த 8 தனிமங்கள் பின்வருமாறு வரிசைப்படுத்தப்படுகின்றன. அவை, ஆக்சிஜன், சிலிக்கான், அலுமினியம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகும். ஆக்ஸிஜன் மற்றும் சிலிக்கான்கள் இரண்டும் இவற்றில் மிக முக்கியமானவைகளாகும். எடை விகிதாச்சாரப்படி புவி ஓட்டின் எடையில் ஆக்ஸிஜன் 47 சதவீதமும் மற்றும் சிலிக்கான் 28 சதவீதமும் காணப்படுகின்றன.<ref>{{cite book | title=Mineralogy and Optical Mineralogy | publisher=Mineralogical Society of America | author=Dyar, Gunter, and Tasa | year=2007 | pages=4–7 | isbn=978-0939950812}}</ref>
 
உருவாகின்ற கனிமங்கள் அவை உருவான மூலமான பாறைகளின் வேதியியல் தன்மையால் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்த மாக்மா ஒலிவின்கள் மற்றும் பைராக்சீன்கள் போன்ற மாஃபிக் கனிமங்களையும், சிலிக்கா நிறைந்த மாக்மா, ஃபெல்ட்சுபார் மற்றும் குவார்ட்ஸ் போன்ற SiO<sub>2</sub> உள்ளடக்கிய கனிமங்களையும் உருவாக்குகின்றன. சுண்ணாம்புப்பாறையானது, கால்சைட் அல்லது அராகனைட் (இரண்டுமே CaCO<sub>3</sub>) ஆகிய கனிமங்களை உருவாக்குகின்றது, ஏனெனில், பாறையானது கால்சியம் மற்றும் கார்பனேட் நிறைந்திருக்கிறது. எந்தப் பாறையின் வேதித்தன்மையானது ஒரு கனிமத்தின் வேதித்தன்மையோடு ஒத்த தன்மையைப் பெறவில்லையோ அந்தக் கனிமமானது அந்தப் பாறையில் காணப்படாது. உதாரணமாக, அலுமினியம் மிகை சேல்சு வகைப் பாறைகள் உருமாற்றத்தின் மூலமாக கையனைட், Al<sub>2</sub>SiO<sub>5</sub> கனிமத்தைத் தருகின்றன.
 
ஒரு திண்மக் கரைசலின் தொடரில் இறுதி உறுப்புக் கனிமங்கள் மாறுபாட்டிற்குத் தகுந்தவாறு வேதியியல் இயைபு மாறுபடும். உதாரணமாக, பிளாகியோகால்சு ஃபெல்ட்சுபார்கள் ஒரு தொடர்ச்சியான சோடியம் நிறைந்த கனிமங்களான அல்பைட்டு (NaAlSi3O8) முதல் கால்சியம் நிறைந்த அனார்தைட்டு (CaAl2Si2O8) வரையான தொடரை உள்ளடக்கியுள்ளன. இவற்றிற்கு இடையே தொடர்ச்சியான நான்கு இடைநிலை வகைகளை (சோடியம் நிறைந்தவற்றிலிருந்து , கால்சியம் நிறைந்தவற்றுக்கான வரிசையில்) அதாவது, ஓலிகோகால்சு, அன்டெசைன், லேப்ராடோரைட் மற்றும் பைடோவ்னைட் ஆகிய கனிமங்களைக் கொண்டுள்ளது. மெக்னீசியம் நிறைந்த ஃபோர்ஸ்டெரைட்டு மற்றும் இரும்பு-நிறைந்த ஃபைலைட் போன்ற ஒலிவைன் தொடர்கள் மற்றும் மாங்கனீசு நிறைந்த ஹியூப்னெரைட்டு மற்றும் இரும்பு-நிறைந்த ஃபெர்பிராய்டு போன்ற வால்ஃப்ராமைட் தொடர்கள் ஆகியவை மற்ற உதாரணங்கள் ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2303159" இருந்து மீள்விக்கப்பட்டது