"மின்னணுவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

194 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
[[File:US Navy 080820-N-9079D-007 Electronics Technician 3rd Class Michael J. Isenmann, from St. Louis, Mo., performs a voltage check on a power circuit card in Air Navigation Equipment room aboard the aircraft carrier USS Abraham Lin.jpg|thumb|அமெரிக்க ''Abraham Lincoln'' (CVN 72) எனும் வானூர்திக் கலத்தில் கருவி அறையில் ஒரு திறன்சுற்றதர் அட்டையில் மின்னணுநுட்பர் மின்னழுத்தத்தைச் சரிபார்த்தல்.]]
 
== மின்னணுக் கருவிகளும் கூறுகளும் ==
[[படிமம்:Componentes.JPG|thumbnail| மின்னணுக் கூறுகள்]]
மின்னணுக் கூறு என்பது ஒரு இலத்திரனியல் அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அவ்வமைப்பு செயல்பட ஏதுவாக இலத்திரன்களையோ அதன் தொடர்புடைய புலங்களையோ பாதிக்கின்ற உளதாம் பொருளாகும். இக்கூறுகள் பொதுவாக மற்றக்கூறுகளுடன்
குறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக [[பெருக்கி]], [[வானொலி பெறும் கருவி]], அல்லது [[மின்னணு அலையியற்றி|அலையியற்றி]]) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக [[மின்சுற்றுப் பலகை]]யில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான [[ஒருங்கிணைந்த சில்லு]] போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: [[மின்தேக்கி]]கள், [[மின்தூண்டி]]கள், [[மின்தடையம்|மின்தடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[திரிதடையம்|திரிதடையங்கள்]] ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன.
 
[[வெற்றிடக் குழல்]]கள் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனிய கூறுகளில் ஒன்றாகும். இவை நடு1980கள் வரை முதன்மை செயல்படு கூறுகளாக இருந்தன.<ref name="Okamura1994">{{cite book|author=Sōgo Okamura|title=History of Electron Tubes|url=http://books.google.com/books?id=VHFyngmO95YC&pg=PR4|accessdate=5 December 2012|year=1994|publisher=IOS Press|isbn=978-90-5199-145-1|page=5}}</ref> 1980களிலிருந்து திண்மநிலைக் கருவிகள் இவற்றிற்கு மாற்றாக அமைந்துள்ளன. இன்றும் வெற்றிடக் குழல்கள் உயராற்றல் பெருக்கிகள், [[எதிர்முனைக் கதிர்க்குழாய்]]கள், வல்லுநர் ஒலிக்கருவிகள், [[அதிர்வின் வீச்சு|நுண்ணலைக் கருவிகள்]] போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
 
== மின்சுற்று வகைகள் ==
மின்சுற்றுக்களும் இலத்தினியக் கூறுகளும் இருவகையாகப் பிரிக்கப்படலாம்: அலைமருவி மற்றும் எண்மருவி. ஒரு குறிப்பிட்ட கருவியில் இவற்றில் ஏதேனும் ஒருவகையிலோ அல்லது இரண்டும் கலந்துமோ பயன்படுத்தப்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2303372" இருந்து மீள்விக்கப்பட்டது