மறுமலர்ச்சி (ஐரோப்பா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வரலாற்றுக் காலப்பகுதிகள்
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 50:
 
அதன் பிறகுதான் மற்ற நோயாளிகளை பரிசோதிக்க வேண்டும் என்ற முறையை ஏற்படுத்தினார். இது குறிப்பாக பிரசவம் பார்க்கும் மருத்துவ அறிஞர்களுக்கு பொருந்தும் என்பது அவருடைய வாதம்.
 
== மறுமலர்ச்சி பரவல் ==
15ஆம் நூற்றாண்டில், மறுமலர்ச்சி இத்தாலியின் பிளோரசன்சில் இருந்து ஐரோப்பாவின் மற்ற இடங்களுக்கு வேகமாக பரவியது. அச்சடிக்கும் இயந்திரத்தின் கண்டுபிடிப்பு புதிய புதிய யோசனைகள் வேகமாக பரவ வழிவகுத்தது. 20 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் மறுமலர்ச்சியை தேசிய மற்றும் மத இயக்கங்களாக பிரித்தனர். 
 
=== வடக்கு ஐரோப்பா ===
வடக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி வடக்கு மறுமலர்ச்சி என்று வழங்கப்பட்டது. இத்தாலியில் இருந்து மறுமலர்ச்சி யோசனைகள் வடக்கு நோக்கி நகர்ந்த பொழுது இசையில் பெரிய அளவில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஓவியங்களை பொறுத்தவரை இத்தாலிய ஓவியங்கள் மதச்சார்பற்று உருவாக்கப்பட்டன ஆனால் வடக்கு ஐரோப்பாவில் முதலில் மதம் சார்ந்த ஓவியங்களே வரையப்பட்டன. பின்னாட்களில் பீட்டர் பிருகள் போன்றவர்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளை ஓவியங்களாக தீட்டினர். வடக்கு மறுமலர்ச்சியின் பொழுதே பல ஆண்டுகள் நீடித்திருக்கும் எண்ணை ஓவியங்கள் முழுமைபெற்றன. 
 
=== இங்கிலாந்து ===
16ஆம் நூற்றாண்டில் ஆங்கில மறுமலர்ச்சி தொடங்கிற்று. ஷேக்ஸ்பியர், சர் தாமஸ் மோர், பிரான்சிஸ் பேகன் போன்ற எழுத்தாளர்கள், இண்டிகோ ஜோன்ஸ் போன்ற கட்டட வடிவமைப்பாளர்கள் தாமஸ் டாலிஸ் போன்ற இசை மேதைகள் ஆங்கில மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர்.
 
=== பிரான்ஸ் ===
மறுமலர்ச்சியை குறிப்பிடும் வார்த்தையான "Renaissance" ஒரு பிரெஞ்சு சொல்லாகும். இதன் பொருள் மறுபிறப்பு என்பதாகும். 18 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தபட்ட இந்த சொல் பின்னாளில் பிரான்ஸின் வரலாறு என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமடைந்தது. 
 
== பின்வருவனவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/மறுமலர்ச்சி_(ஐரோப்பா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது