மறுமலர்ச்சி (ஐரோப்பா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 66:
15ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் மறுமலர்ச்சி ஜெர்மனிக்கு பரவத்துடங்கியது. இவற்றில் அச்சகங்களின் பங்கு அலாதியானது. 
 
=== நெதர்லாந்து ===
15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலியின் மறுமலர்ச்சி நெதர்லாந்தையும் சென்றடைந்தது. இதற்கு பெல்ஜியதில் இருந்த டச்சு மொழி பேசும் பிளாண்டர்கள் ப்ருகஸ் நகர் வழியாக மேற்கொண்ட வணிகம் பெரிய அளவில் உதவியது. பிளாண்டர்கள் ஐரோப்பா முழுவதும் அறியப்பட்ட பெரிய கலைஞர்களை நெதர்லாந்துக்கு அழைத்துவந்தனர். அறிவியலில் உடற்கூற்றியல் துறை நிபுணர் ஆண்ட்ரீயஸ் போன்றவர்கள் மறுமலர்ச்சியை முன்னெடுத்து சென்றனர். 
 
=== போர்ச்சுக்கல் ===
இத்தாலிய மறுமலர்ச்சியின் தாக்கம் போர்ச்சுகளை குறைவாக தாக்கியதாகவே கருதப்படுகிறது. போர்ச்சுக்கல் மறுமலர்ச்சி செல்வந்த இத்தாலி மற்றும் பிளண்டர்களின் முதலீடுகளால் சாத்தியப்பட்டது. போர்ச்சுக்கலின் தலைநகரான லிஸ்பன் 15 ஆம் நூற்றாண்டில் தழைத்தோங்கியது. காரணம் கண்டுபிடிப்புக்காலம் என்று போற்றப்படும்  பூகோளத்தின் வரைபடத்தை உருவாக்கிய பல கடல் பயணங்கள் போர்ச்சுக்கல் மூலமே செயல்படுத்தப்பட்டது. 
 
=== ஹங்கேரி ===
இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அடுத்து பரவிய இரண்டாம் நாடு ஹங்கேரி எனலாம். இதற்கு இத்தாலி மற்றும் ஹங்கேரி இடையே ஏற்கனவே நிலவிய பல கட்டங்களிலான ஒத்துழைப்பும் ஒரு காரணம். 
 
=== ரஷ்யா ===
இத்தாலிய மறுமலர்ச்சியின் தாக்கம் ரஸ்சியாவிலும் எதிரொலித்தது ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய அதே வேகத்தில் அல்ல. காரணம் ஐரோப்பா மற்றும் ரஷ்யா இடையேயான தூரம் அதிகம். ஈவான் III என்ற இளவரசர் இத்தாலியின் பல அறிஞர்களை ரஷ்யாவிற்கு அழைத்து வந்தார். அவர்களை கொண்டு புதிய கட்டுமான பணிகளை உருவாக்க செய்தார். 
 
== பின்வருவனவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/மறுமலர்ச்சி_(ஐரோப்பா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது