"கெய்ரோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,811 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
[[படிமம்:Fostat-329.jpg|right|thumb|upright|ஏ. எசு. ராப்போபோர்ட்டின் "எகிப்திய வரலாறு" நூலில் பியூசுடாட்டின் ஓவியம் "|alt=A man on a donkey walks past a palm tree, with a mosque and market behind him.]]
 
[[மெம்பிசு, எகிப்து|மெம்பிசைச்]] சுற்றியுள்ள தற்கால கெய்ரோவின் பகுதி, நைல் ஆற்றுப்படுகையின் மேற்புறத்தில் அமைந்துள்ளதால் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] மையப் பகுதியாக விளங்கியது. இருப்பினும் இந்த நகரத்தின் துவக்கம் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட குடியேற்றங்களால் உருவானது. நான்காம் நூற்றாண்டில்,<ref>{{harvnb|Hawass|Brock|2003|p=456}}</ref> மெம்பிசின் புகழ் குறைந்து வந்தபோது <ref>{{cite encyclopedia |year=2009 |title=Memphis (Egypt) |encyclopedia=Encarta |publisher=Microsoft |url=http://encarta.msn.com/encyclopedia_761573551/memphis_(egypt).html |accessdate=24 July 2009|archiveurl=http://www.webcitation.org/5kwQXIiNw|archivedate=31 October 2009|deadurl=yes |ref=harv}}</ref> [[உரோமைப் பேரரசு|உரோமானியர்கள்]] [[நைல்]] ஆற்றின் கிழக்குக் கரையில் கோட்டை ஒன்றைக் கட்டி நகரத்தை உருவாக்கினர். ''பாபிலோன் கோட்டை'' என அறியப்பட்ட இந்தக் கோட்டை நகரத்தின் மிகவும் தொன்மையான கட்டிடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கோட்டையைச் சுற்றியே [[கோப்துக்கள்|கோப்து மரபுவழி சமூகத்தினர்]] வாழ்கின்றனர். கெய்ரோவின் பழங்கால கோப்து தேவாலயங்கள் இந்தக் கோட்டையின் சுவர்களை ஒட்டியே அமைந்துள்ளன;இப்பகுதி கோப்துக்களின் கெய்ரோ என அறியப்படுகிறது.
 
கி.பி. 640 இல் முஸ்லீம்களின் வெற்றியைத் தொடர்ந்து, வெற்றிபெற்ற அமர் இபின் பாபிலோன் கோட்டையின் வடக்குப் பகுதியில் அல் ஃபுஸ்தாத் என அழைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் குடியேறினார். துவக்கத்தில் கூடார முகாம் (ஃபுஸ்தாத் (fusta) என்பதன் பொருள் "கூடாரங்களின் நகரம்" என்பதாகும் ) ஃபுஸ்தாத் நிரந்தர குடியிருப்பாகவும் பின்னர் இஸ்லாமிய எகிப்தின் முதல் தலைநகரமாகவும் மாறியது.
 
கி.பி 750 இல், [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியரால்]] [[உமையா கலீபகம்]] தூக்கியெறியப்பட்ட பின்னர், புதிய ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த தலைநகரமாக மாறிய ஃபுஸ்தாத்தின் வடகிழக்கு பகுதிக்கு தங்கள் குடியிருப்பை உருவாக்கினர். இது அல்-அஸ்கார் (பாசறை அல்லது பாளையம்) என அழைக்கப்பட்டது, இங்கு ஒரு இராணுவ முகாம் போடப்பட்டு இருந்தது.
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2303830" இருந்து மீள்விக்கப்பட்டது