பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
செருமனி நாட்டைச் சேர்ந்த [[எர்மேன் இசுடாடிஞ்சா்]] (1881-1965) என்ற வேதியியலாளர், முதன்முதலாக பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி பலபடி என்பது நீண்ட சங்கிலித்தொடர்களில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட அணுக்களைக் கொண்ட பருமூலக்கூறு ஆகும். அவருடைய ஆய்வானது பலபடிகளைப் பற்றிய வேதியியல்ரீதியான புரிதலை ஆழப்படுத்தியது. அதற்கு முன்னதாக அறிவியலாளா்கள் பலபடிகள் என்பவை சிறு மூலக்கூறுகளின் தொகுதிகள் என்றும் அவைகளுக்கு குறிப்பிட்ட மூலக்கூறு நிறை கிடையாது என்றும் அவை பெயர் தெரியாத ஒரு விசையின் காரணமாக ஒன்றோடு ஒன்று சேர்ந்து உள்ளன என்றும் நம்பியிருந்தனர். 1953 ஆம் ஆண்டில் எர்மேன் இசுடாடிஞ்சருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் [[வாலசு கரோதர்சு]] என்பவர் முதல் தொகுப்பு முறை இரப்பரான நியோப்ரீனைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு பட்டு இழைக்கு பதிலியாக நைலானைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கரைசல்களில் பலபடிகளின் அமைப்பு ([[சமவாய்ப்பு முறை சுருள்]]) தொடர்பான பணிக்காக [[பவுல் ப்ளோரி]] என்பவர் 1974 ஆம் ஆண்டில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
 
தற்போது மிகுந்த எண்ணிக்கையிலான, [[கார்பன் இழை]]-[[ஈபாக்சி]], [[பாலிசுடைரீன்]]-[[பாலிபியூட்டாடையீன்]] (HIPS), [[அக்ரைலோநைட்ரைல்]]-[[பியூட்டாடையீன்]]-[[இஸ்டைரீன்]] (ABS), மற்றும் இதே போன்ற கூட்டுக்கலவைகளை உள்ளடக்கிய வணிகரீதியிலான பலபடிகள் கிடைக்கின்றன. இத்தகைய பலபடிகள் பல்வேறு பகுதிப்பொருட்களின் சிறப்பான குணங்களைப் பெற்று, உயர் வெப்பநிலையில் வேலை செய்யத் தகுந்த, தானியங்கி இயந்திரங்களின் உட்பாகங்களாக பயன்படுத்தப்படுகின்றன. பலபடி வேதியியலுக்குத் தொழிற்துறையில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தும் கூட பல்கலைக்கழகங்கள் இதைப் பாடமாக கற்றுத் தருவதற்கும், இத்துறையில் ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் நீண்ட காலம் எடுத்துக்கொண்டன. 1940 ஆம் ஆண்டில், செருமனி நாட்டில், ப்ரீபர்க் எனுமிடத்தில் எர்மேன் இசுடாடிஞ்சா் அவர்களின் வழிகாட்டுதலின் படி பருமூலக்கூறுகளின் வேதியியலுக்கான நிறுவனம் ([[Institut fur Makromolekulare Chemie]]) உருவாக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டில் எர்மேன் மார்க் என்பவரால் புரூக்ளின் பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பலபடி ஆராய்ச்சி நிறுவனம் ("Polymer Research Institute") நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் பல நுாறு பட்டதாரிகள் அமெரிக்கப் பலபடி தொழிற்துறையிலும், பலபடி தொழில்நுட்பம் சார்ந்த கல்வித்துறையிலும் மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளனா். 1961 ஆம் ஆண்டில், ரிச்சர்டு எஸ் இஸ்டெயின் என்பவரால் ஆமெர்ஸ்ட் என்ற இடத்தில் உள்ள மாசாசுசெட்சு பல்கலைக்கழகத்தில் ரிச்சர்டு எஸ் இஸ்டெயின் என்பவராலும்பல்கலைக்கழகத்திலும், 1967 ஆம் ஆண்டில் எரிக் பேயர் என்பரால் கேசு மேற்கத்திய ரிசர்வ் பல்கலைக்கழகத்திலும், 1982 ஆம் ஆண்டில் தெற்கு மிசிசிபியின் பல்கலைக்கழகத்திலும், 1988 ஆம் ஆண்டில் அக்ரான் பல்கலைக்கழகத்திலும் பலபடி ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பலபடி_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது