"மார்க் டுவெய்ன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,326 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(முற்பதிவு)
== இளமைக்காலம் ==
சாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ், [[புளோரிடா]], [[மிசூரியில்]] 1835ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் [[ஜான் மார்ஷல் கிளமென்ஸ்]], [[டென்னசி]]யைச் சேர்ந்த ஒரு வணிகர். தாயார், ஜேன் லம்ப்டன் கிளமென்ஸ். இவர் குடும்பத்தின் ஏழு பிள்ளைகளுள் ஆறாவதாகப் பிறந்தார். எனினும், நால்வர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். இவருடன் சகோதரர்கள் ஒரியன், ஹென்றி மற்றும் சகோதரி பமீலா ஆகியோர் மட்டுமே உயிருடன் இருந்தனர். மார்க்கின் நான்காவது வயதின் போது தன் குடும்பத்தினர் ஹன்னிபல் எனும் துறைமுக நகரத்திற்க்கு குடிபெயர்ந்தனர், இவ்விடமே ''டாம் சாயரின் சாகசங்க''ளில் வரும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் எனும் கற்பனை நகரத்திற்கு உருவம் கொடுத்தது. 1847ல் மார்க்குக்கு 11 வயது இருக்கும் போது மார்க்கின் தந்தை நிமோனியாவால் இறந்து போனார். அதற்கு பின்னர் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட மார்க் அச்சகம், அண்ணனுக்கு உதவி என வேலைகள் செய்த பின், நியூயார்க், ஃபிலாடெல்பியா, செயின்ட் லூயிஸ் மற்றும் சின்சின்னாடியில் அச்சகராக பணி செய்தார். நூலகத்தில் தன் அறிவை வளர்த்துக் கொண்டார். அதன் பின்னர் சிறிது காலம் நீராவி கப்பலின் கேப்டனாக இருந்தார். இச்சமயமே அவருக்கு மார்க் டுவெய்ன் எனும் பெயர் ஏற்ப்பட்டது. அவர் சிறிது காலம் சுரங்க தொழிலாளியாக பணியாற்றினார், பின் டெரிடொரியல் என்டர்பிரைஸ் எனும் பத்திரிக்கையில் வேலை செய்தார். பின்னர் மார்க் ஒரு நாள் குவாக்கர் சிட்டிக்கு பயணம் செய்யும் போது தன் வருங்கால மைத்துனர் சார்லஸ் லாங்க்டனை கண்டார். சார்லஸ் லாங்க்டன் தன் தங்கை ஒலிவியாவின் புகைபடத்தை காட்ட மார்க் காதல் வயப்பட்டார்.
 
==அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஈர்ப்பு==
[[File:Twain in Tesla's Lab.jpg|thumb|1894 ன் ஆரம்ப காலகட்டத்தில் நிக்கோலா தெஸ்லாவின் அறிவியல் ஆய்வுக்கூடத்தில் டுவெய்ன்]]
அறிவியல் மற்றும் அறிவியல் சோதனைகளில் டுவெய்ன் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஆஸ்திரிய இயற்பியல் விஞ்ஞானியான [[நிக்கோலா தெஸ்லா|நிக்கோலா தெஸ்லாவிடம்]] மிக நெருக்கமான மற்றும் நீண்டகால நட்பை உருவாக்கினார். இருவரும் ஒன்றாக தெஸ்ராவின் [[ஆய்வகம்|ஆய்வகத்தில்]] அதிக நேரம் செலவிட்டார்கள்.
டுவெய்ன் மூன்று கண்டுபிடிப்புகளுக்கு [[காப்புரிமை|காப்புரிமைச்]] சான்றிதழ் பெற்றிருந்தார். ஆடைகளில் அளவுக்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய வார் பட்டை ("''Improvement in Adjustable and Detachable Straps for Garments''") மற்றும் வரலாற்றுத் துணுக்கு விளையாட்டு அதில் அடங்கும் <ref> name=USPTO>{{cite web |url=http://www.uspto.gov/about-us/news-updates/mark-twain-granted-his-first-patent-december-19-1871 |title=Mark Twain Granted His First Patent on December 19, 1871 |publisher=[[United States Patent and Trademark Office]] |date=December 18, 2001}}</ref><ref>{{Cite book | last=J. Niemann | first=Paul | title=Invention Mysteries (Invention Mysteries Series) | date= November 2004| publisher=Horsefeathers Publishing Company | location= | isbn=0-9748041-0-X | pages=53–54 | url=https://books.google.com/?id=TFjBk0tn9A4C&pg=PA52}}</ref>. மிக வணிக முக்கியத்துத்துடன் வெற்றியடைந்தது அவர் கண்டிறிந்த சுயமாக ஒட்டும் தன்மையுள்ள முதல்பதிவுப் புத்தகம் (self-pasting scrapbook) ஆகும். அப்புத்தகத்தில் பசை தடிவப்பட்டு காய்ந்த நிலையில் இருக்கும். புகைப்படங்கள் அல்லது எவற்றையாவது ஒட்டுவதற்கு முன்னர் அவ்விடத்தை ஈரப்படுத்தி பின்னர் ஒட்டி பயன்படுத்த வேண்டும். இப்பத்தகங்கள் 25,000 பிரதிக்கு மேல் விற்றன.<ref> name=USPTO</ref> <ref> name=USPTO</ref>
 
 
 
== இல்லற வாழ்வு ==
3,862

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2305754" இருந்து மீள்விக்கப்பட்டது