நெருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 92:
காடுகளில் மரங்கள் அல்லது காய்ந்த புற்கள் ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும்போது உண்டாகும் உராய்வினால் நெருப்பு பற்றிக் கொள்ளும். இத்தகைய காட்டுத் தீ (WILD FIRE) என்றழைக்கப்படும் நெருப்பு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். சில வேளைகளில் காற்றின் வேகம் மற்றும் சுற்றுச்சூழலில் காணப்படும் வெப்பநிலையைப் பொறுத்து இந்த காட்டுத் தீயானது, ஒரு நெருப்புப் பந்தாக உருவெடுத்து நெருப்புச் சுழலாக உருமாறும். காற்றின் வேகச் சுழற்சி காரணமாக, செங்குத்தாய் உருவாகும் இத்தகைய நெருப்புப் கோளங்கள் சில பொழுதுகளில் முப்பது அடி முதல் இருநூறு அடி உயரமும், சுமார் பத்து அடி அகலமும் கொண்ட வெப்பச் சூறாவளியாக மாறிவிடும். காற்று வீசும் திசை மற்றும் வேகத்தைப் பொறுத்து இந்நெருப்புச் சூறாவளி நீண்ட நேரம் நீடிக்கும். இத்தகைய நெருப்புச் சூறாவளியின் வெப்பநிலையானது மிக அதிகளவில் காணப்படும். இதன் காரணமாக இது கடந்து செல்லும் பாதையில் உள்ள மரங்கள், செடிகள் எல்லாம் சொற்ப நேரத்தில் தீயில் கருகி மடியும். இந்த நெருப்புச் சூறாவளி,
மிகவும் குறுகிய காலத்தில் இயற்கைப் பேரழிவை உண்டாக்கி விடும் தன்மையுடையது. மரங்கள் செடிகள் உள்ளிட்ட தாவரங்கள் மட்டும் இல்லாமல் காட்டில் வசிக்கும் பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் முதலானவையும் அகப்பட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாக மாண்டு போகும்.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=36&cad=rja&uact=8&ved=0ahUKEwjDrOSK8sPUAhULso8KHSU9C2wQFgiMAjAj&url=http%3A%2F%2Fithutamil.com%2F%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581-%25E0%25AE%259A%25E0%25AF%2582%25E0%25AE%25B1%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%2F&usg=AFQjCNEPsc5MoxKhf-AuT5dhaADwk94-cA&sig2=hf3Xzj61hYIfrJFE2ZxL9w">{{cite web | url=http://ithutamil.com/ | title=நெருப்பு சூறாவளி | accessdate=17 சூன் 2017}}</ref>
 
==நெருப்பை நெருங்கவிடாத ரொடோடென்றன் மரம்==
 
காட்டில் திடீரென உருவாகும் காட்டுத் தீயானது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு வைக்காது அழித்துவிடும். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் நெருங்க விடாமல் காத்துக்கொள்ளும் தகவமைப்பைத் தன்னகத்தே கொண்ட மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.[[File:Rhododendron in full bloom! (8620051426).jpg|Rhododendron in full bloom! (8620051426)]]
 
[[File:Rhododendron rings.jpg|Rhododendron rings]]
 
'''இமயமலை ரொடோடென்றன்''' ( Himalayan Rhododendran) எனப்படும் இத்தகைய மரத்தின் அருகில் நெருப்பானது பரவி வருகையில், பல அடுக்குகளாகத் தகவமைப்புப் பெற்றுள்ள இதன் மரப் பட்டைகளிலிருந்து நீர் போன்றதொரு திரவம் வடியத் தொடங்கிவிடும். இதனால் நெருப்பினால் உண்டாகும் அழிவிலிருந்து இத்தகைய மரங்கள் நெருப்பை நெருங்கவிடாமல் தப்பித்துக் கொள்ளும். பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இத்தகைய மரங்கள் பறவைகளைத் தன்னகத்தே கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாழிடங்களாக விளங்குகின்றன. அதுபோல, பலத்த காற்றினையும் எதிர்த்து நிற்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் இவை திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து உருவாக்கப்படும் மலர்ச் சாறு மருத்துவத் தன்மை நிறைந்தது. தமிழில் '''காட்டுப் பூவரசு''' என இது அழைக்கப்படுகிறது. நீலகிரியில் வாழும் படுகர்கள் தம் மொழியில் இதனை '''பில்லி''' என்றழைக்கின்றனர். பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவர்கள் இம்மரத்தில் காணப்படும் பூக்களை,'''போரஸ்''' என்று கூறுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் (நீலகிரி, ஆனைமலை, பழனி மலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகள்) அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான இடங்களில் இம்மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இது வழங்கப்படுகிறது. இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் ரொடோடென்றன் மரங்கள் காணப்படுகின்றன.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/நெருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது