நெருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 88:
==நெருப்பை நெருங்கவிடாத ரொடோடென்றன் மரம்==
காட்டில் திடீரென உருவாகும் காட்டுத் தீயானது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு வைக்காது அழித்துவிடும். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் நெருங்க விடாமல் காத்துக்கொள்ளும் தகவமைப்பைத் தன்னகத்தே கொண்ட மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.[[File:Rhododendron in full bloom! (8620051426).jpg|thumb|left|150px|முழுமையாகப் பூத்த நிலையில் ரொடொடென்றன்]]
[[File:Rhododendron rings.jpg|thumb|right|150px|ரொமாண்டிக் டொடென்றன்ரொடொடென்றன் வளையங்கள்]]
'''இமயமலை ரொடோடென்றன்''' ( Himalayan Rhododendran) எனப்படும் இத்தகைய மரத்தின் அருகில் நெருப்பானது பரவி வருகையில், பல அடுக்குகளாகத் தகவமைப்புப் பெற்றுள்ள இதன் மரப் பட்டைகளிலிருந்து நீர் போன்றதொரு திரவம் வடியத் தொடங்கிவிடும். இதனால் நெருப்பினால் உண்டாகும் அழிவிலிருந்து இத்தகைய மரங்கள் நெருப்பை நெருங்கவிடாமல் தப்பித்துக் கொள்ளும். பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இத்தகைய மரங்கள் பறவைகளைத் தன்னகத்தே கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாழிடங்களாக விளங்குகின்றன. அதுபோல, பலத்த காற்றினையும் எதிர்த்து நிற்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் இவை திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து உருவாக்கப்படும் மலர்ச் சாறு மருத்துவத் தன்மை நிறைந்தது. தமிழில் '''காட்டுப் பூவரசு''' என இது அழைக்கப்படுகிறது. நீலகிரியில் வாழும் படுகர்கள் தம் மொழியில் இதனை '''பில்லி''' என்றழைக்கின்றனர். பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவர்கள் இம்மரத்தில் காணப்படும் பூக்களை,'''போரஸ்''' என்று கூறுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் (நீலகிரி, ஆனைமலை, பழனி மலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகள்) அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான இடங்களில் இம்மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இது வழங்கப்படுகிறது. இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் ரொடோடென்றன் மரங்கள் காணப்படுகின்றன.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=40&cad=rja&uact=8&ved=0ahUKEwjDrOSK8sPUAhULso8KHSU9C2wQFgipAjAn&url=http%3A%2F%2Fperiyarpinju.com%2F2010%2Faugust%2Fpage14.php&usg=AFQjCNHFG8dhUd7Z_V3B__O74GHyiAwTRw&sig2=IL4tJuJ3dsh5ZlUMkZ3jyA">{{cite web | url=http://periyarpinju.com/ | title=நெருப்பு நெருங்காத மரம் | accessdate=17 சூன் 2017}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/நெருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது