முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

450 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மின்சாரம்''' (''electricity'') என்பது [[மின்னூட்டம்|மின்னூட்டத்துடன்]] தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்ட்த்தின் பாய்வே ஆகும். அதாவது, எதிர்மின்னூட்டம் உடைய மின்னன்களின் பாய்வையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். இயற்கையில் முகிலில் இருந்து புவிக்குப் பாயும் மின்னன்களின் பாய்வே அல்லது மின்சாரமே [[மின்னல்|மின்னலுக்கு]] காரணமாகும். தொடக்கத்தில் மின்சாரம் காந்த நிகழ்வோடு தொடர்பற்ற தனி நிகழ்வாகக் கருதப்பட்டாலும் மேக்சுவெல் சமன்பாடுகளின் உருவாக்கத்துக்குப் பின்னர், மின்சாரமும் காந்தமும் ஒருங்கிணைந்த மின்காந்த நிகழ்வின் கூறுகளே என்பது புலனாகியது. மின்னோட்டம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருளில் [[மின்காந்தம்|மின்காந்த]]ப் புலம் உருவாகிறது. மின்னல், நிலைமின்சாரம், மின்வெப்பமாக்கம், மின் இறக்கம் என பலநிகழ்வுகள் மின்சாரத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. மேலும் மின்சாரம் பல நிகழ்காலத் தொழில்நுட்பங்களின் உயிரோட்டமாக அமைகிறது.
 
நேர்வகை அல்லது எதிர்வகை மின்னூட்டத்தின் நிலவல் மின்புலத்தை உருவாக்குகிறது. மறுதலையாக, மின்னூட்டங்களின் இயக்கம் அல்லது மின்னோட்டம் காந்தப் புலத்தை உருவாக்குகிறது.
 
மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306289" இருந்து மீள்விக்கப்பட்டது