== வரலாறு ==
[[File:Thales.jpg|thumb|upright|alt=கட்டற்ற முடியோடு தாடிவளர்த்த மனிதனின் சிலை|[[தெலேசு]],தொடக்கநிலை மின்சார ஆய்வாளர்]]
மின்சாரம் பற்றிய அறிவேதும் இல்லாத நிலையிலேயே மனிதன் மின்சார மீன்களால் அதிர்ச்சியடைந்துள்ளனர். கி.மு 28 ஆம் நூற்றாண்டில் பண்டைய எகுபதியர் மின்சார மீன்களைப் பற்றி நைல்நதியின் இடிமின்னல்கள் எனவும் மற்றவகை அனைத்து மீன்களின் காப்பாளராகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கர்களும் உரோமானியர்களும் அராபிய இயற்கையியலாளர்களும் இசுலாமிய மருத்துவர்களும் மின்சார மீன்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.<ref>{{citation|title=Review: Electric Fish|first=Peter|last=Moller|journal=BioScience|volume=41|issue=11|date=December 1991|pages=794–6 [794]|doi=10.2307/1311732|jstor=1311732|publisher=American Institute of Biological Sciences|last2=Kramer|first2=Bernd}}</ref>
== மின்னாக்க நிலையங்கள் ==