அதிர்வெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 117:
 
ஒரு நொடியில் தோன்றும் விம்மல்களின் எண்ணிக்கையானது, அடுத்தடுத்த இரு பெருமங்களுக்கான கால இடைவெளியின் தலைகீழியாகவோ அல்லது இரு சிறுமங்களுக்கான கால இடைவெளியின் தலைகீழியாகவோ அமையும்.<ref>{{cite book | title=இயற்பியல் தொகுதி இரண்டு பதினோராம் வகுப்பு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்,சென்னை. | year=2016 | pages=பக்.63-65}}</ref>
 
==விம்மல்களின் பயன்கள்==
 
*விம்மல்கள் இரு அதிர்வுறும் பொருள்களின் அதிர்வேங்களைச் சமமாக்கி ஒரே அதிர்வூட்டுவதற்குப் பயன்படுகின்றன.உதாரணத்திற்கு, சுரமானிக் கம்பியின் அதிர்வெண்ணை இசைக்கவை ஒன்றின் அதிர்வெண்ணிற்கு விம்மல்களைக் கொண்டு சமப்படுத்திட இயலும். அதிர்வூட்டப் பெற்ற இசைக்கவையைச் சுரமானியின் மீது பொருந்தச் செய்யும்போது சுரமானிக் கம்பியின் அதிர்வெண்ணும் இசைக்கவையின் அதிர்வெண்ணும் சற்றேறேக்குறைய சமமாக இருக்குமேயானால் விம்மல்கள் வெளிப்படும்.கம்பியின் நீளத்தைச் சரிசெய்திடும்போது விம்மல்களின் எண்ணிக்கைக் குறைந்து இறுதியில் பூச்சியமாகும். தற்போது சுரமானிக் கம்பியின் அதிர்வெண்ணும் இசைக்கவையின் அதிர்வெண்ணும் சமமாகக் காணப்படும். பெரும்பாலான இசைக்கருவிகளில் இத்தகைய முறையானது பயன்படுத்தப்பட்டு ஒத்ததிர்வு உருவாக்கப்படுகின்றன.
 
*அதுபோல்,விம்மல்களைப் பயன்படுத்தி இசைக்கவை ஒன்றின் அதிர்வெண்ணைக் கண்டுபிடிக்க இயலும். அதிர்வெண் N உடைய படித்தற இசைக்கவையை, அதிர்வெண் தெரியாத இசைக்கவையுடன் சேர்த்து அதிர்வூட்டம் செய்ய வேண்டும். அப்போது ஒரு நொடியில் உருவாகும் விம்மல்களின் எண்ணிக்கை n எனில் தெரியாத அதிர்வெண் N+/-n ஆகும். தெரியாத அதிர்வெண் கொண்ட இசைக்கவையில் சிறிதளவு தென் மெழுகினை ஒட்டி, அதிர்வெண் குறைக்கப்படுதல் வேண்டும்.மறுபடியும் மேற்குறிப்பிட்ட இரு இசைக்கவைகளையும் ஒருங்கே
அதிர்வூட்டப்படுத்திடுதல் வேண்டும்.தற்போது, விம்மல்களின் எண்ணிக்கை முன்பைவிட மிகுதி எனில், தெரியாத அதிர்வெண் N-n ஆகும். விம்மல்களின் எண்ணிக்கை முன்பைவிடக் குறைவு எனில், தெரியாத அதிர்வெண் N+n ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது