"ஆயுதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,511 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
போர்க் கப்பல் என்பது போர் புரிவதற்காகச் சிறப்பாகக் கட்டப்படும் கப்பல் ஆகும். இவை வணிகக் கப்பல்களைவிட வேறுபட்ட முறையில் பெரிய அளவில் அமைக்கப்படுகின்றன. ஆயுதங்களைக் கொண்டிருப்பது மட்டுமன்றி இவை, சேதங்களைத் தாங்கக் கூடியவையாகவும், வேகமாகச் செல்லத்தக்க வகையிலும், இலகுவாகத் திசைமாற்றத்தக்க வகையிலும் உருவாக்கப்படுகின்றன. போர்க் கப்பல்கள், பொதுவாக ஆயுதங்கள், அவற்றுக்குத் தேவையான வெடிபொருட்கள், போர் வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்கின்றன. போர்க் கப்பல்கள் பொதுவாக ஒரு நாட்டின் கடற்படைக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. தனியாரும், நிறுவனங்களும் கூடச் சில வேளைகளில் போர்க் கப்பல்களை தயாரிப்பதுண்டு .
 
==== நீர்மூழ்கிக் கப்பல் ====
 
நீர்மூழ்கிக் கப்பல் என்பது நீரினுள் மூழ்கி செல்லக்கூடியது . இது , போர்களில் ஒற்றர்களைப்போல செயல்படுபவை. கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீழ்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார். சில வருடங்களுக்கு முன்னால் சிறிய அளவில் செய்யப்பட்டன. தற்போது 400 அடி நீளம் வரை உள்ளன. நீர்மூழ்கிக் கப்பலில் 2 என்ஜின்கள் உள்ளன. நீர்மட்டத்திற்கு மேலே ஒரு என்ஜின் உள்ளது.
இது கப்பல் செல்லும்போது நீராவியால் இயக்கப்படும். இன்னொன்று, கப்பல் நீரில் மூழ்கிச் செல்லும்போது மின்சாரத்தால் இயக்கப்படும். தற்போதுள்ள புதிய கப்பல்கள் 12,000 மைல் தூரம்வரை நிற்காமல் செல்லக்கூடியவை. 60 மணிநேரம் மின்சார ஆற்றலும் செயல்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காற்று வாங்க மேடை ஒன்று இருக்கும். மேலே பீரங்கி இருக்கும். கடலின் உள்ளே செல்லும்போது பீரங்கியை உள்ளே இழுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. மேடையின்மீது ஒரு சிறிய கோபுரம் அமைந்திருக்கும். கோபுர உச்சியில் பெரிஸ்கோப் (Periscope) இரட்டைக் கண்ணாடி 2 அல்லது 3 பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று சரியாகத் தெரியாவிட்டாலும் இன்னொன்று உதவும். இந்தக் கண்ணாடியில் நான்கு திசைகளிலும் திருப்பிப் பார்க்கும் வசதியும் உள்ளது. எனவே, நீரினுள் இருக்கும்போது கண்ணாடியின் உதவியால் மாலுமி மேலே நடைபெறும் செயல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பெரிஸ்கோப் செயல்படவில்லையெனில் கப்பலுக்கு வழி தெரியாது. எனவே, நீர்மூழ்கிக் கப்பலின் கண்கள் அழைக்கப்படுகிறது.
 
* [[கிளைமோர்]]
655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306490" இருந்து மீள்விக்கப்பட்டது