ஒத்திசைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
இயற்பியலில், '''ஒத்திசைவு''' அல்லது பரிவு என்பது ஒரு அதிர்வுறும் அமைப்பு அல்லது புற விசையானது வேறொரு அமைப்பினை குறிப்பிட்ட [[அதிர்வெண்|அதிர்வெண்களில்]] பெரிய [[வீச்சம்|வீச்சத்துடன்]] இயக்கிக்கும்இயக்கும் நிகழ்வு ஆகும்.
 
தொகுதியின் வீச்சம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ள அதிர்வெண்கள் பரிவுறும் அதிர்வெண்கள், ஒத்திசைவுறும் அதிர்வெண்கள் அல்லது இயற்கை அதிர்வெண்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒத்திசைவு அதிர்வெண்களில் சிறிய ஆவர்த்தனமான விசை கூட பெரிய வீச்சமுடைய அலைவுகளை  தொகுதிகளில் உண்டாக்கின்றன. இவை தேக்கி வைக்கப்பட்டிருக்கும் அதிர்வு ஆற்றல் மூலம் உண்டாகின்றன.
 
ஒத்திசைவானது ஓர் அமைப்பு வெவ்வேறு ஆற்றல் சேமிப்பு முறைகளுக்கு இடையில் இலகுவாக ஆற்றலை சேமித்தும் பரிமாற்றக்கூடியதாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் நிகழ்கிறது.
ஆனால் ஒவ்வொரு சுழற்சியிலும் சிறிதளவு ஆற்றல் இழக்கப்படுகிறது, இது தணிப்பான் எனப்படுகிறது. தணிப்பானின் அளவு சிறிதாக இருக்கும் போது ஒத்திசைவு அதிர்வெண் தொகுதியின் இயற்கை அதிர்வெண்ணிற்கு அண்ணளவாக சமனாக இருக்கும், இயற்கை அதிர்வெண் எனப்படுவது தொகுதியின் தூண்டப்படாத அதிர்வெண் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஒத்திசைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது