இழான் இழாக்கு உரூசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 39:
1743 தொடக்கம் 1744 வரை, வெனிசில் இருந்த பிரான்சு தூதருக்கு இவர் செயலாளராக இருந்தார். 11 மாதங்கள் வரை பணிபுரிந்த பின்னர் இவர் பணிநீக்கப்பட்டார். விசாரணைக்குப் பயந்து இவர் அங்கிருந்து பாரிசுக்குத் தப்பிச் சென்றார். அங்கே அவர் ஓரளவு படித்திருந்த தையல்காரி ஒருவருடன் நட்புக்கொண்டு அவருடன் வாழ்ந்தார். உரூசோவின் கூற்றுப்படி அவருக்கு இத் தையல்காரி மூலம் ஐந்து பிள்ளைகள் பிறந்தன. பிள்ளைகள் பிறந்தவுடனேயே அவை [[அனாதை இல்லம்|அனாதை இல்லங்களுக்கு]] அனுப்பப்பட்டன. அனாதை இல்லத்துப் பிள்ளைகளின் இறப்பு வீதம் அதிகமாக இருந்த அக் காலத்தில் இப் பிள்ளைகளில் பல இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கல்வி, பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் அறியப்பட்ட கோட்பாட்டாளராக விளங்கிய உரூசோ, தனது பிள்ளைகளைக் கைவிட்டது குறித்து இவரது எதிரிகள் இவரைக் கடுமையாக விமர்சித்தனர். தான் ஒரு ஏழைத் தந்தை என்றும், அநாதை இல்லங்களில் பிள்ளைகள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் உரூசோ கூறினார்.
 
=='''ரூசோவின் கல்விச் சிந்தனைகள்நூல்கள்'''==
 
ரூசோ எழுதிய தத்துவ நூல்
சமுதாய ஒப்பந்தம் (The Social Contract) ஆகும். "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான். ஆனால்,
அடிமை சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளான்" என்னும்
வாக்கியத்துடன் தொடங்கும் இந்நூல் கி.பி.1762-இல் வெளியானது. அந்நூலில் அரசன் என்பவன் மக்களின்
நலனுக்காகவும் மக்களோடு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பயனாகவும் உருவாக்கப்பட்டவனாவான். மக்களின்
உரிமைகளைப் போற்றிப் பாதுகாக்கும் வரையில்தான் அவன் அரசன் என்றழைக்கப்படுவான். அவ்விதிகளை அவ் அரசன் மீறுவானேயானால் மக்களும் தம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்த விதிகளை மீற முயற்சிப்பர் என அந்நூல் எடுத்துரைக்கிறது. அதன்பிறகு அவர் எழுதிய எமிலி
(Emile) எனும் நூலில்தான் குழந்தைகளுக்கான கல்விப் பயிற்று முறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://groups.google.com/forum/m/%23!topic/valluvanpaarvai/5JmtT1Yz69Q&ved=0ahUKEwjPpu2708bUAhUHLo8KHXnyBa4QFghFMAU&usg=AFQjCNF4ZuCA79SeCltd8kBIzArzeBbKsQ&sig2=zeRDPV0Ywk_LKR_aAFKEog">{{cite web | url=https://groups.google.com/forum/m/#!topic/valluvanpaarvai/5JmtT1Yz69Q | title=ரூசோ - வரலாற்று நாயகர்! | accessdate=18 சூன் 2017}}</ref>
 
=='''ரூசோவின் கல்விச் சிந்தனைகள்'''==
 
ரூசோ தமது கல்வி சார்ந்த தத்துவக் கருத்துக்களைச் '''சமூக ஒப்பந்தம்''', '''எமிலி''' ஆகிய நூல்களின் வழியாக முன்வைத்தார். ரூஸோவின் இயற்பண்புவாதத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படும் கல்விக் கோட்பாடுகளின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:
"https://ta.wikipedia.org/wiki/இழான்_இழாக்கு_உரூசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது