இலியட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 80:
 
உலோகங்களைப் பொறுத்தவரை வெண்கலத்தினைக் கிரேக்கர்களும் ட்ரோஜன்களும் மதித்தனர். இலியட் காவியத்தில் கவச உடை, ஈட்டி, வாள், தேர், ஈட்டியின் முனை, தலைக்கவசம் என எல்லாவற்றிலும் வெண்கலமே கோலோச்சியது. தங்கம் மற்றும் வெள்ளியின் பயன்பாடுகள் இக்காவியத்தில் குறைந்து காணப்படுகின்றன.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://old.thinnai.com/%3Fp%3D60703152&ved=0ahUKEwjwq5eUwsfUAhULOo8KHW8aBmsQFghCMA0&usg=AFQjCNFnV-6FJM1hw9mrCmuzs9LzWke8vw&sig2=r9LlovKScUoQbBJCdKxWIA">{{cite web | url=http://old.thinnai.com/ | title=ஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம் | accessdate=18 சூன் 2017}}</ref>
 
=='''காவியப் பண்புகள்'''==
 
காவியத்திற்கென ஒருசில இன்றியமையாத பண்புகள் உண்டென அறிஞர்கள் கருதுகின்றனர். காவியம் என்பது வீரப்பண்பு உடையதாகவும் நாடகத் தன்மைக் கொண்டதாகவும் காணப்படும். சமுதாயப் பதிவுகளும் அறைகூவல்களும் ஆங்காங்கே காவியத்தினுள் அமைந்து இருக்கும். குறிப்பாக, தேசியப் பண்பு இருத்தல் அவசியம். காவியத்தில் அவ்வக்கால இடச்சூழல், அறக்கருத்துகள், கதையமைப்பு, பாத்திரப் படைப்பு, கிளைக் கதைகள் முதலியன அமைந்திருத்தல் சிறப்பாகும். இத்தகைய காவியப் பண்புகளை உலக மொழிகள் அனைத்திலும் காணவியலும். ஹோமரது இலியட், ஒடிசி போன்ற பழம்பெரும் காவியங்களில் இவை உள்ளன. உலக மொழிகளில் தோன்றியுள்ள ஏனைய காவியங்களிலும் இத்தகைய காவியப் பண்புகள் இருப்பதை அறிய முடிகின்றது.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a011/a0114/html/A0114112.htm | title=இலியட் காப்பியப் பண்புகள் | accessdate=18 சூன் 2017}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/இலியட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது