சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Diversity of youth in Oslo Norway.jpg|right|300px|thumb|பல்வகைப்பட்ட இனங்கள் கொண்ட ஒரு சமூகத்தில் தொடர்புகளை வைத்திருக்கும் இள வயதினர்.]]
 
'''சமூகம்''' ''(Society)'' என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும், ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். இக்குழுவில் உள்ளவர்களிடையே தொடர்ச்சியான சமூக உறவுகள் காணப்படும். இவ்வகையான குழுக்களில் இருப்பவர்கள் மேலாதிக்க கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டிருப்பர். தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தொடர்புகள் இத்தகைய குழுவினரின் அடிப்படையாக அமைந்திருக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது சமூகம் என்பதை பல்வேறுபட்ட மக்கள் அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய பொருளியல், சமூக மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு எனலாம். பொதுவாக சமூகம் என்பது "தமிழர்" என்பது போல ஒரு குறிப்பிட்ட மக்களையோ, "இலங்கை" என்பதுபோல ஒரு நாட்டையோ அல்லது "மேல்நாட்டுச் சமூகம்" என்பதுபோல ஒரு பரந்த பண்பாட்டுக் குழுவையோ குறிப்பதாகக் கொள்ளலாம் <ref>{{cite book|last=Briggs|first=Asa|title=The Age of Improvement|year=2000, 2nd Edition|publisher=Longman|isbn=0-582-36959-2|pages= 9}}</ref>.
 
இக்குழுக்கள் ஏதொவொரு வகையில் கூட்டுறவாக இயங்குவதால் அக்குழு சார்ந்த சமூகத்திற்கும், சமூக உறுப்பினர்களுக்கும் நன்மைகள் உண்டாகின்றன. கூட்டுறவு மனப்பான்மை இல்லாவிடில் இத்தகைய நன்மைகள் தனிநபர்களுக்கு கிடைப்பது இயலாததாகிவிடுகின்றது. தனிப்பட்ட மற்றும் சமூகத்திற்கு கிடைக்கின்ற பொதுவான நன்மைகள் வேறுபடுகின்றன. பல சந்தர்ப்பங்களில் இவை ஒன்றுடன் ஒன்றாய் சேர்ந்து இரண்டுக்கும் பொதுவாக்கின்றன. தனியர்கள் தங்கள் சொந்த நெறிகள் மற்றும் மதிப்புகளை கடைபிடித்துக் கொண்டு மேலாதிக்கம் கொண்ட பெரிய சமுதாயத்திற்குள்ளும் அங்கத்தினர்களாக வாழமுடியும். சில சமயங்களில் இத்தகைய ஒரே சிந்தனை கொண்ட மக்கள் குழு துணைக்குழு என்று குறிப்பிடப்படுகிறது, இச்சொல்லாடல் குற்றவியல் கோட்பாட்டிற்குள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது