அறிவொளிக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
மெய்யியல்
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22:
 
இம்மானுவேல் கன்ட் (1724–1804) பகுத்தறிவு வாதம் மற்றும் சமய நம்பிக்கை, தனிமனித சுதந்திரம் மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றுக்கிடையிலான ஒரு சமரசத்தைக் காண முற்பட்டதோடு, தனிப்பட்ட மற்றும் பொது பகுத்தறிதலூடாக பொது வெளி ஒன்றை உருவாக்கவும் முயன்றார்.<ref>{{cite web|url=http://web.mnstate.edu/gracyk/courses/web%20publishing/KantOnElightenment.htm|title=Kant's essay What is Enlightenment?|work=mnstate.edu}}</ref> கன்டின் செயற்பாடுகள் செருமானிய எண்ணக் கருக்களைச் சீர்படுத்துவதிலும் மேலும் அனைத்து ஐரோப்பிய தத்துவவியலை சீராக்குவதிலும் முக்கிய பங்காற்றியது. 20ம் நூற்றாண்டு வரையிலும் இதன் தாக்கம் காணப்பட்டது.<ref>Manfred Kuehn, ''Kant: A Biography'' (2001).</ref> மேரி வொல்சுடோன்கிராப்ட் இங்கிலாந்தின் துவக்ககால பெண்ணிய தத்துவவியலாளர்களுள் ஒருவராவார்.<ref>{{cite web|author=Steven Kreis |url=http://www.historyguide.org/intellect/wollstonecraft.html |title=Mary Wollstonecraft, 1759–1797 |publisher=Historyguide.org |date=2012-04-13 |accessdate=2014-01-14 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20140111055540/http://www.historyguide.org/intellect/wollstonecraft.html |archivedate=2014-01-11 |df= }}</ref> இவர் பகுத்தறிவு அடிப்படையிலான சமுதாய உருவாக்கம் சார்பாக வாதிட்டதோடு, ஆண்களும் பெண்களும் பகுத்தறிவாதிகளாக நோக்கப்படவேண்டுமெனவும் கோரினார். A Vindication of the Rights of Woman (பெண்கள் உரிமை தொடர்பான கொள்கைநாட்டரவு) (1791) இவரது சிறப்பான படைப்பாகும்.<ref>Mary Wollstonecraft, ''A Vindication of the Rights of Woman'' (Renascence Editions, 2000) [https://scholarsbank.uoregon.edu/xmlui/bitstream/handle/1794/785/vindication.pdf?sequence=1 online]</ref>
 
==அறிவியல்==
{{main article|அறிவொளிக் காலத்தில் அறிவியல்}}
 
அறிவொளி தொடர்பான உரையாடல் மற்றும் சிந்தனையில் அறிவியல் முக்கிய பங்கு வகித்தது. பல்வேறு அறிவொளிக்கால எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் அறிவியல் பின்னணியைக் கொண்டிருந்தனர். இவர்கள் சமயம் மற்றும் பாரம்பரிய அதிகாரத்தின் வீழ்ச்சியும் சுதந்திர சிந்தனை மற்றும் பேச்சுரிமை ஆகியவற்றின் விருத்தியுமே அறிவியல் வளர்ச்சிக்கு காரணமாகக் கருதினர். அறிவொளிக் கால அறிவியல் முன்னேற்றங்களில் இரசாயனவியலாளரான யோசேப்பு பிளாக்கின் மூலமான காபனீரொட்சைட்டின் கண்டுபிடிப்பு, நிலவியலாளர் சேம்சு அட்டனினால் முன்வைக்கப்பட்ட நீள் நேரம் தொடர்பான கொள்கை, சேம்சு வாட்டின் மூலமான நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்பு என்பவை குறிப்பிடத்தக்கன.<ref>Bruce P. Lenman, ''Integration and Enlightenment: Scotland, 1746–1832'' (1993) [http://www.amazon.com/dp/0748603859 excerpt and text search]</ref> லவோசியரின் ஆராய்ச்சிகள் பாரிசு நகரில் முதலாவது நவீன இரசாயனத் தொழிற்சாலையை உருவாக்க உதவின.மேலும், மொன்ட் கோல்பியர் சகோதரர்களின் ஆய்வுகள் வெப்ப ஆவி பலூன்களின் மூலமான முதலாவது மனிதப் பறப்புக்கு உதவின. இதன் மூலம் புவா டி பொலோஞ்சுக்கு அருகிலுள்ள சாடோ டி லா முயெட் எனும் இடத்திலிருந்து நவம்பர் 21, 1783ல் முதலாவது வெப்ப ஆவி பலூன் ஏவப்பட்டது.<ref>Sarmant, Thierry, ''Histoire de Paris'', p. 120.</ref>
 
பரவலாக நோக்கில், அறிவொளிக்கால அறிவியல் புலனறிவாதம் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைக்கு பெருமளவில் முக்கியத்துவம் வழங்கியது. மேலும், அறிவொளிக்கால சிந்தனைகளான முன்னேற்றம் மற்றும் மேம்பாடு என்பவற்றோடும் இயைந்து சென்றது. இயற்கை மெய்யியலின் கீழ் வகைப்படுத்தப்பட்ட அறிவியற்கல்வியானது இயற்பியல் மற்றும் இரசாயனவியலும் இயற்கை வரலாறும் என்ற இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தது. இரசாயனவியல் மற்றும் இயற்கை வரலாறு, உடற்கூற்றியல், உயிரியல், நிலவியல், கனிமவியல், மற்றும் விலங்கியல் ஆகியவற்றின் கூட்டாகக் காணப்பட்டது.<ref>Porter (2003), 79–80.</ref> ஏனைய பெரும்பாலான அறிவொளிக்காலச் சிந்தனைகள் போலவே அறிவியலின் நன்மைகளும் அனைவராலும் ஏற்கப்படவில்லை. அறிவியல் மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான இடைவெளியை அதிகரிப்பதாகவும், மனிதரை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக செயற்படவில்லையெனவும் உரூசோ விமர்சித்தார்.<ref>Burns (2003), entry: 7,103.</ref> அறிவொளிக் காலத்தின் போது அறிவியல் சங்கங்களும் கல்விக் கூடங்களுமே முன்னிலை பெற்றன. இவை பல்கலைக்கழகங்களைப் பின்தள்ளி அறிவியல் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான மையப் புள்ளியாக முதன்மை பெற்றன. சங்கங்களும் கல்விக் கூடங்களும் முதிர்வு மற்றும் அறிவியல் தொழில்முறைக்கு அடிப்படையாக அமைந்தன. அதிகரித்து வந்த படித்த சமூகத்தினரிடம் அறிவியல் பிரபல்யம் பெற்றமை இன்னுமொரு முக்கிய முன்னேற்றமாகும். மெய்யியலாளர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவியல் கொள்கைகளை அறிமுகப்படுத்தினர். இவற்றுள் ''Encyclopédie'' மற்றும் வோல்டேர் மற்றும் எமிலி டு சற்றெலி ஆகியோரால் பிரபலப்படுத்தப்பட்ட நியூட்டனியம் போன்ற ஊடகங்கள் முக்கியமானவை. சில வரலாற்றாய்வாளர்கள் 18ம் நூற்றாண்டை அறிவியல் வரலாற்றின் சலிப்பூட்டும் காலப்பகுதியாகக் குறிப்பிடுகின்றனர்.<ref>see Hall (1954), iii; Mason (1956), 223.</ref> எனினும், இந் நூற்றாண்டில் மருத்துவம், கணிதம் மற்றும் இயற்பியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், உயிரியல் வகைப்பாட்டியலில் வளர்ச்சி, காந்தவியல் மற்றும் மின்னோட்டம் பற்றிய புதிய விளக்கங்கள், நவீன இரசாயனவியலுக்கு வழிகோலிய இரசாயனவியலின் முதிர்ச்சி என்பன ஏற்பட்டன.
 
பல்கலைக்கழகங்களின் புலமை வாதத்துக்கு மாறாக அறிவியல் கல்விக்கூடங்கள் மற்றும் சங்கங்கள் அறிவியல் புரட்சியின் விளைவாக அறிவியல் அறிவின் உருவாக்குனர்களாக வளர்ச்சி பெற்றன.<ref>Gillispie, (1980), p. xix.</ref> அறிவொளியின் போது, சங்கங்கள் பல்கலைக்கழகங்களுடனான தொடர்பை உருவாக்க அல்லது பேண முயன்றன. எவ்வாறாயினும் சமகால மூலங்கள் பல்கலைக்கழகங்களையும் அறிவியல் சங்கங்களையும் பிரித்தறிய விழைகின்றன. பல்கலைக்கழகங்களின் பயன்பாடு என்பது அறிவைக் கடத்துதலே என்றும், சங்கங்கள் அறிவை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவை வாதிடுகின்றன.<ref>James E. McClellan III, "Learned Societies," in ''Encyclopedia of the Enlightenment'', ed. Alan Charles Kors (Oxford: Oxford University Press, 2003) http://www.oup.com/us/catalog/general/subject/HistoryWorld/Modern/?view=usa&ci=9780195104301 (accessed on June 8, 2008).</ref> அமைப்புமுறை அறிவியலில் பல்கலைக்கழகங்களின் பங்கு தேய்வடைந்து சென்ற அதேவேளை, ஒருங்கிணைக்கப்பட்ட அறிவியலின் மையப்புள்ளியாக கற்ற சமூகம் முதன்மை பெற்றது. அலுவல்முறை அறிவியல் சங்கங்கள் அரசாங்கத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணத்துவ வழங்கல் நிறுவனங்களாகச் செயற்பட்டன.<ref>Porter, (2003), p. 91.</ref> பெரும்பாலான சங்கங்கள் தமது சொந்த வெளியீடுகளை மேற்பார்வையிடவும், புதிய உறுப்பினர்களின் தெரிவைக் கட்டுப்படுத்தவும், சங்கத்தை நிர்வகிக்கவும் அனுமதி பெற்றிருந்தன.<ref>See Gillispie, (1980), "Conclusion."</ref> 1700க்குப் பின், பாரியளவிலான அலுவல்முறைக் கல்விக்கூடங்களும் சங்கங்களும் ஐரோப்பாவில் நிறுவப்பட்டன. 1789ம் ஆண்டளவில் எழுபதுக்கும் மேற்பட்ட அலுவல்முறை அறிவியல் சங்கங்கள் காணப்பட்டன. இவ் வளர்ச்சியைக் குறிக்கும் வகையில், பேர்னாட் டி பொன்டெனெல் 18ம் நூற்றாண்டை "கல்விக்கூடங்களின் நூற்றாண்டு" என விளித்தார்.<ref>Porter, (2003), p. 90.</ref>
 
அறிவொளிக்காலத்தில் அறிவியலின் பாதிப்பை கவிதையிலும் இலக்கியத்திலும் கூடக் காணமுடிகிறது. சில கவிதைகளில் அறிவியல் உருவகங்கள் மற்றும் உவமைகள் புகுத்தப்பட்டிருந்ததோடு ஏனையவை நேரடியாக அறிவியல் கருத்துக்கள் தொடர்பாக எழுதப்பட்டிருந்தன. சேர். ரிச்சார்ட் பிளக்மோர் தமது ''Creation, a Philosophical Poem in Seven Books'' (படைப்பு, ஏழு புத்தகங்களிலான ஒரு தத்துவக் கவிதை) (1712) எனும் படைப்பை உருவாக்க நியூட்டனிய முறைமையைப் பயன்படுத்தினார். 1727ல் நியூட்டனின் மரணத்தின் பின், அவரை கௌரவிக்கும் வகையில் பல பதிற்றாண்டுகளுக்கு கவிதைகள் பாடப்பட்டன.<ref name="Burns, 2003, entry: 158">Burns, (2003), entry: 158.</ref> சேம்சு தோம்சன் (1700–1748) தமது "Poem to the Memory of Newton" (நியூட்டனின் நினைவுக் கவிதை) எனும் கவிதையை எழுதியதன் மூலம் நியூட்டனின் இழப்பை சோகத்தோடு நினைவுகூர்ந்ததோடு, அவரது அறிவியல் மற்றும் மரபுரிமையைப் புகழ்ந்துரைத்தார்.<ref>Thomson, (1786), p. 203.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அறிவொளிக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது