அசை (ஒலியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
வரிசை 1:
 
{{AEC| TNSE P. RAMESH KPM }}
 
== அசை (ஒலியியல்) ==
[[மொழியியல்|மொழியியலின்]] ஒரு பிரிவான ஒலியியலில் '''அசை''' என்பது, பேச்சொலித் தொடர் அமைப்பின் ஓர் அலகைக் குறிக்கும். பேச்சொலியின் அடிப்படைத் துணுக்கு அசை ஆகும். அசைக்குப் பொருள் கிடையாது. ஒரு மொழியில் இடம்பெறும் [[சொல்|சொற்கள்]], [[உருபன்]]கள், தொடர்கள் போன்றவை அசைகளால் ஆனவை. இவற்றின் அமைப்பு [[மொழி]]க்கு மொழி வேறுபட்டு அமையலாம். ஒரு சொல் அல்லது உருபன் ஓர் அசையை அல்லது அதற்கு மேற்பட்ட அசைகளைக் கொண்டிருக்கக் கூடும். ஒன்று, இரண்டு, மூன்று அசைகளைக் கொண்ட சொற்களைத் [[தமிழ்|தமிழில்]] முறையே ஓரசைச் சொற்கள், ஈரசைச் சொற்கள், மூவசைச் சொற்கள் என்பர். நாலசைச் சொற்கள், ஐந்தசைச் சொற்களும் உள்ளன எனினும் தமிழில் இத்தகைய சொற்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
''அம்மா'' என்னும் சொல்லில் ''அம்'', ''மா'' என இரண்டு அசைகள் உள்ளன. இது போலவே ''படகு'' என்னும் சொல்லில் ''ப'', ''ட'', ''கு'' என்னும் மூன்று அசைகள் உள்ளன. எனவே ''அம்மா'' ஈரசைச் சொல்லும், ''படகு'' மூவசைச் சொல்லும் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/அசை_(ஒலியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது