பகுவியல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:மணி.கணேசன்|மணி.கணேசன்]]|சூன் 1119, 2017}}
 
[[கணிதம்|கணிதத்தை]] பரந்தவாரியாக இரண்டு பிரிவுகளாகப்பிரிக்கலாம். தனித்தனிச்செயல்முறைகள் கொண்டது ஒன்று. தொடர் செயல்முறைகள் கொண்டது மற்றொன்று. முதல் பிரிவில் [[இயற்கணிதம்]], [[நேரியல் இயற்கணிதம்]], [[எண் கோட்பாடு]], [[சேர்வியல் (கணிதம்)|சேர்வியல்]], முதலியவை அடங்கும். இரண்டாம் பிரிவில் '''பகுவியல்''' (''Mathematical Analysis''), [[சார்புப்பகுவியல்]], [[இடவியல்]], முதலியவை அடங்கும். [[வடிவவியல்]] இவையிரண்டிலும் சேரும். இவைகளில் பகுவியல் என்ற உப இயல் [[நியூட்டன்]] தொடங்கிவைத்த [[நுண்கணிதம்|நுண்கணித]]க்கருத்துகளில் விதையிடப்பட்டு, 17, 18, 19 வது நூற்றாண்டுகளில் [[ஆய்லர்]], [[லாக்ரான்ஜி]], [[கோஷி]], [[வியர்ஸ்ட்ராஸ்]], [[கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்|காஸ்]], [[ரீமான்]], [[ஃபொரியர்]] இன்னும் பலருடைய ஆய்வுகளினால் பெரிய ஆலமரமாக வளர்ந்துவிட்ட ஒரு மிகச்சிறந்த பிரிவு. இத்துறையினுடைய எண்ணப் பாதைகள் [[இயற்பியல்]], [[பொறியியல்]], இரண்டிலும் ஆழப்புகுந்து, 19 வது நூற்றாண்டின் பிற்பாதியில், அறிவியலில் எந்தப் பிரச்சினையானாலும் அதை சரியானபடி உருவகப்படுத்திவிட்டால் கணிதம் அதைத் தீர்வு செய்துவிடும் என்ற ஒரு நம்பிக்கையை அறிவியலுலகில் அனைவருக்கும் உண்டுபண்ணியது.
"https://ta.wikipedia.org/wiki/பகுவியல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது