காயல்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
 
==வீடு கட்டமைப்பு==
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும், இனத்திலும், சமுதாயத்திலும் அவர்களுக்கென்று தனித் தனி கலாச்சாரம், அமைப்புகள் இருக்கின்றன. அதே போல் அவர்களின் கட்டிடங்களும் அவர்கள் வாழும் வீடுகளும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பொறுத்தே அமைக்கப்படுகின்றன. காயல்பட்டணத்திற்கென்று தனியாக வீட்டின் அமைப்பு இருக்கின்றது. மிகப் பெரும்பான்மையான வீடுகள் இதே மாதிரியே கட்டப்படுகின்றன..
சாதாரணமாக வீடுகள் 20 அடி அகலம் 40 அடி நீளமும் உயரம் குறைந்தபட்சம் 10 அடி கொண்டதாகவே வீடுகள் கட்டப்படுகின்றன. இதில் ஜான்ஸ் என்னும் வரவேற்பறை, ஊட்டாங்கரை என்னும் படுக்கை அறை, திண்ணை என்னும் ஹால் அதன்பின் முற்றம் அதன் ஒரு பகுதியில் கழிவறை, குளியலறை மற்றும் மறுபக்கத்தில் அடுப்பாங்கரை என்னும் சமையலறை ஆகியவை அமைக்கப்படுகின்றன.ஆண்களுக்கு மாடிக்கு செல்ல ஏணிபடிகள் ஜான்ஸிலிருந்தும் பெண்களுக்கு திண்ணையிலிருந்து மாடிக்கு செல்ல ஏணிப் படிகள் தனியாக அமைக்கப்படுகின்றன. இரண்டு வீடுகளுக்கு அடுத்தாற்போல் முடுக்கு எனப்படும் ஓடை அமைக்கப்படுகிறது. அது குறைந்த பட்சம் 3 அடி கொண்டதாக இருக்கும். அதன்பிறகு அடுத்த வீடு இருக்கும். ரோட்டிலிருந்து உள்பக்கம் உள்ள வீட்டினர் வெளியே செல்வதற்கு பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/காயல்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது