"வினை வகைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,030 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
* சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.
 
===செய்வினை செயப்பாட்டுவினை வாக்கியங்கள்===
 
====செய்வினை வாக்கியம்====
ஒரு வாக்கியம் எழுவாய் செயப்படுப்பொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும். வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும் வரும்.
====உதாரணம்====
கண்மணி பாடத்தைப் படித்தாள்
(எழுவாய்) (செயப்படுபொருள்) (பயனிலை)
இது செய்வினைத் தொடர் - Active Voice. பொதுவாக செயப்பாட்டு வினையில் எழுவாயுடன் ஆல், ஆன் இவற்றில் ஒன்று நேராகவோ, மறைந்தோ வரலாம்.
====செயப்பாட்டு வினை வாக்கியம்====
ஒரு வாக்கியம் செயப்படுப்பொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் அமையும். எழுவாயோடு ’ஆல்’ என்ற 3ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு ‘பட்டது’, ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.
====உதாரணம்====
பாடம் கண்மணியால் படிக்கப்பட்டது.
(செயப்படுபொருள்) (எழுவாய்) (பயனிலை)
இது செயப்பாட்டு வினை - Passive Voice. பொதுவாக செயப்பாட்டு வினையில் எழுவாயுடன் ஆல், ஆன் இவற்றில் ஒன்று நேராகவோ, மறைந்தோ வரலாம்.
===செய்வினைத் தொடரைச் செயப்பாட்டு வினைத் தொடராக்கும் விதிகள்===
(அ) எழுவாயைச் செயப்படுபொருள் ஆக்க வேண்டும். அதனுடன் மூன்றாம் வேற்றுமை உருபாகிய ‘ஆல்’ என்பதைச் சேர்க்க வேண்டும்.
====எடுத்துக்காட்டு====
கண்மணி + ஆல் = கண்மணியால்
(ஆ) செயப்படுபொருளில் உள்ள, ‘ஐ’ வேற்றுமை உருபை நீக்கி, எழுவாயாக மாற்ற வேண்டும்.
====எடுத்துக்காட்டு====
பாடத்தை - பாடம் + ஐ. இதில் ‘ஐ’ நீக்கினால், பாடம்(எழுவாய்)
(இ) பயனிலையுடன் ‘படு’, ‘பட்டது’ என்னும் துணைவினைகளைச் சேர்க்க வேண்டும்.
====எடுத்துக்காட்டு====
பாடம் கண்மணியால் படிக்கப்பட்டது.
இவ்வாறு செயப்பாட்டு வினை - Passive Voice அமையும் என்பதை அறிக.
மேலும் சில எடுத்துக்காட்டுகள்.
===செய்வினையை செயப்பாட்டு வினையாக மாற்றுதல்===
====செய்வினை====
ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
====செயப்பாட்டு வினை====
இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது.
சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது.
 
===செயப்பாட்டு வினையை செய்வினையாக மாற்றுதல்===
====செயப்பாட்டு வினை====
நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது.
====செய்வினை====
நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர்.
இவ்வாறு, செய்வினை, செயப்பாட்டு வினைத் தொடர்கள் அமையும்.
 
===உடன்பாட்டுவினை எதிர்மறைவினை வாக்கியங்கள்===
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2314843" இருந்து மீள்விக்கப்பட்டது