மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
'''மொழி''' (''language'') என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி [[குறியீடு]]களையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது. மொழி பற்றிய அறிவியல் அடிப்படையிலான கற்கை "[[மொழியியல்]]" எனப்படும். சொற்கள் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றனவா என்பது போன்ற மொழி மெய்யியல் சார்ந்த விடயங்கள் குறித்துப் பண்டைய கிரேக்கத்தில் ஜார்சியாசு, பிளேட்டோ ஆகியோர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு வந்தன. மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற்றதாக [[ரூசோ]] போன்ற சிந்தனையாளர்கள் கருதினர். காந்த் போன்றவர்கள் அறிவார்ந்ததும், ஏரணம் சார்ந்தனவுமான சிந்தனைகளில் இருந்தே மொழி தோன்றியது என்றனர். 20 ஆம் நூற்றாண்டின் மெய்யியலாளரான விட்யென்சுட்டீன் என்பார் மெய்யியல் என்பது உண்மையில் மொழி பற்றிய ஆய்வே என வாதிட்டார்.
 
மனித மொழி [[உற்பத்தித்திறன் (மொழியியல்)|உற்பத்தித்திறன்]], [[இடப்பெயர்ச்சி (மொழியியல்)|இடப்பெயர்ச்சி]] ஆகிய இயல்புகளைக் கொண்டது. அத்துடன் அது சமூக மரபுகள், கற்றல் ஆகியவற்றில் முழுமையாகத் தங்கியுள்ளது. இதன் சிக்கலான அமைப்பு, எந்தவொரு விலங்குத் தொடர்பாடல் முறைமையையும் விட மிகப் பரந்த வெளிப்பாட்டு எல்லைகளைக் கொண்டிருக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளது. தொடக்ககால ஒமிமின்கள் தமது உயர் விலங்குத் தொடர்பாடல் முறைமைகளைப் படிப்படியாக மாற்றி, பிற அறிவுக் கோட்பாட்டை உருவாக்கும் திறனைப் பெற்று, முன்னே இல்லாத ஒன்றைக் காணும் பொதுக் கற்பனைத் திறனும் வளர்ந்த போது மொழி தோன்றியதாகக் கருதப்படுகிறது.<ref>{{harvcoltxt|Tomasello|1996}}</ref><ref name="Hauser 2002">{{harvcoltxt|Hauser|Chomsky|Fitch|2002}}</ref>
 
மனிதருடைய மொழிகளில், ஒலியும், [[கை அசைவு]]களும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் [[சொல்|சொற்கள்]] என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் [[இலக்கணம்|இலக்கணங்கள்]] என்றும் அழைக்கப்படுகின்றன.
 
"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது."<ref>[http://thamizhanambi.blogspot.com/2008/01/blog-post_29.html]</ref>
 
மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு [[மொழியியல்]] (linguistics) எனப்பெயர். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது. மனிதர்களின் பயன்பாட்டுக்காக இயற்கை மொழிகளின் இலக்கணங்களையும் சொற்களையும் இணைத்து புதிய மொழி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. இத்தகைய மொழிகளில் எசுபரந்தோ குறிப்பிடத்தக்க தாகும்.
வரிசை 48:
#அர்த்தங்களுடன் கூடிய குறியீடுகள்.
எவ்வாறு குறியீடுகள் மற்றும் அதன் அர்த்தங்கள் இணைந்து பொருள் தருகின்றன என்பதனை பயில்வதே குறியீடுகள் ஆகும்.
இந்த குறியீடுகள் என்பது பயன்படுத்தப்படும் சைகைகள், எழுத்துக்கள் அல்லது குறிகள் அல்லது இவற்றை கலந்தோ பயன்படுத்துகின்றன.இவ்வாறாக பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது வாக்கிய அமைப்பானது அதனை பெறுபவர்க்கு ஒரு குறியீடு முறையில் செல்லும். அதனை பெறுபவர் அதனைசீர்படுத்திக்கொள்வர்.
<ref name="Lyons17">{{harvcoltxt|Lyons|1981|pp=17–24}}</ref>
 
===மொழியியல் வேறுபாடு===
வரி 75 ⟶ 76:
|
|}
===கலாச்சாரம்==
 
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குறிப்பிட்ட விவாத நெறிமுறையாகவே அங்கு நிலவிய மொழிகள் விளங்கின. மேலும் அவர்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அவைகள் விளங்கின. மொழிகள் உச்சரிப்பில், சொல்லகராதி மற்றும் இலக்கணத்தில் மட்டும் வேறுபட்டு இருப்பன அல்ல. மேலும் அவைகள் அந்தந்த இடங்களின் கலாச்சாரத்தின் மூலமாகவும் வித்தியாசப்படுகின்றன. மேலும் மனிதர்கள் தங்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் தங்களுடைய மொழியினை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அது எவ்வாறு மற்றவர்களின் கல்லாச்சாரத்திலிருந்து வேறுபட்டுள்ளது என்பதனை எடுத்துக்கூறுகிறது. ஒரே கலாச்சாரத்தினைப் பின்பற்றுபவர்கள் கூட மொழியினை பயன்படுத்துவதில் வித்தியாசப்படுகின்றனர். அவ்ர்கள் அதனை உச்சரிப்பதிலும், சைகை காண்பிப்பதிலும் வேறுபடுகின்றனர்
== இந்தியாவின் நான்கு மொழிக் குடும்பங்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது