மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 3:
'''மொழி''' (''language'') என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி [[குறியீடு]]களையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது. மொழி பற்றிய அறிவியல் அடிப்படையிலான கற்கை "[[மொழியியல்]]" எனப்படும். சொற்கள் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றனவா என்பது போன்ற மொழி மெய்யியல் சார்ந்த விடயங்கள் குறித்துப் பண்டைய கிரேக்கத்தில் ஜார்சியாசு, பிளேட்டோ ஆகியோர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு வந்தன. மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற்றதாக [[ரூசோ]] போன்ற சிந்தனையாளர்கள் கருதினர். காந்த் போன்றவர்கள் அறிவார்ந்ததும், ஏரணம் சார்ந்தனவுமான சிந்தனைகளில் இருந்தே மொழி தோன்றியது என்றனர். 20 ஆம் நூற்றாண்டின் மெய்யியலாளரான விட்யென்சுட்டீன் என்பார் மெய்யியல் என்பது உண்மையில் மொழி பற்றிய ஆய்வே என வாதிட்டார்.
 
மனித மொழி [[உற்பத்தித்திறன் (மொழியியல்)|உற்பத்தித்திறன்]], [[இடப்பெயர்ச்சி (மொழியியல்)|இடப்பெயர்ச்சி]] ஆகிய இயல்புகளைக் கொண்டது. அத்துடன் அது சமூக மரபுகள், கற்றல் ஆகியவற்றில் முழுமையாகத் தங்கியுள்ளது. இதன் சிக்கலான அமைப்பு, எந்தவொரு விலங்குத் தொடர்பாடல் முறைமையையும் விட மிகப் பரந்த வெளிப்பாட்டு எல்லைகளைக் கொண்டிருக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளது. தொடக்ககால ஒமிமின்கள் தமது உயர் விலங்குத் தொடர்பாடல் முறைமைகளைப் படிப்படியாக மாற்றி, பிற அறிவுக் கோட்பாட்டை உருவாக்கும் திறனைப் பெற்று, முன்னே இல்லாத ஒன்றைக் காணும் பொதுக் கற்பனைத் திறனும் வளர்ந்த போது மொழி தோன்றியதாகக் கருதப்படுகிறது.<ref>{{harvcoltxtcite book|last=Tomasello|first=Michael|authorlink=Michael Tomasello|editor=B. Velichkovsky and D. Rumbaugh|title=Communicating Meaning: The Evolution and Development of Language|year=1996|publisher=Psychology Press|isbn=978-0-8058-2118-5|pages=275–308|chapter=The Cultural Roots of Language|ref=harv}}</ref>
 
மனிதருடைய மொழிகளில், ஒலியும், [[கை அசைவு]]களும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் [[சொல்|சொற்கள்]] என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் [[இலக்கணம்|இலக்கணங்கள்]] என்றும் அழைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது