கரோலஸ் லின்னேயஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
===இருசொல் பெயரிடுவதன் இன்றியமையாமை===
உயிரினங்களின் பெயர்களைப் பொதுப்பெயரிட்டு அழைத்து அறியப்படும் நடைமுறையானது வழக்கத்தில் இருந்து வந்தது. இந்தப் பொதுப்பெயர்கள் இட்டு வழங்கும் முறைகளால் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறான குழப்பங்கள் நீடித்து வந்தன. இந்நடைமுறை உலகத்தார் அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாததாகக் காணப்பட்டது. இத்தகைய குறைபாடுகளைக் களைவதற்காக உயிரினங்களுக்கு அறிவியல் முறைப்படி பெயரிடும் முறை உருவானது. இது உலகளவிலும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கரோலஸ் லின்னேயஸ் தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றிற்கு இரண்டு சொல் பெயரிடும் முறையைத் தோற்றுவித்தார். இதுவே, இருசொற் பெயரிடும் முறை என்று அழைக்கப்படுகிறது.<ref>{{cite book | title=அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம் | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை. | year=2016 | pages=ப. 161}}</ref>
 
===இருசொல் பெயரிடும் முறையின் அடிப்படை விதிகள்===
# உயிரினங்களின் அறிவியல் பெயர் இலத்தின் மொழி அல்லது இலத்தின் மொழி மொழிபெயர்ப்பு ஆகியவற்றால் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
# பேரினப் பெயரில் இடம்பெற்றிருக்கும் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தில் எழுதப்படுதல் இன்றியமையாதது.
# அதுபோல், சிற்றினப் பெயரின் முதல் எழுத்தைச் சிறிய எழுத்தில் எழுதப்படுதல் அவசியம்.
# ஓர் உயிரினத்தின் இருசொற் பெயர்களைப் பதிவிடும்போது சாய்வான எழுத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
# இப்பெயர்களைக் கையினால் எழுதும்போது அப்பெயர்களுக்கு அடியில் அடிக்கோடிட்டு எழுதப்பட வேண்டும்.<ref>{{cite book | title=அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம் | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை. | year=2016 | pages=ப. 161}}</ref>
 
== தாவரவியலாளர் பெயர்ச்சுருக்கத் தரக்குறியீடு==
"https://ta.wikipedia.org/wiki/கரோலஸ்_லின்னேயஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது