சுற்றோட்டத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் [[சிரை]]கள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் [[தமனி]]கள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது, இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இருதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட [[இதய மின்கடத்துகை ஒருங்கியம்]] உதவுகின்றது.
 
=== நுரையீரல் ===
சுற்றோட்டத் தொகுதியின் மற்றோர் முக்கிய உறுப்பு நுரையீரல் ஆகும்.இது [[உயிரினம்|உயிரினங்கள்]] மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உள்/அக [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களில்]] ஒன்றாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு [[மூச்சுவிடல்]] என்று பெயர். [[வாயுப்பரிமாற்றம்]] இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் [[ஆக்சிசன்|ஆக்சிசனை]] உள் எடுத்துக்கொள்வதற்கும் [[காபனீரொக்சைட்டு]] [[வளிமம்|வளிமத்தை]] வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 [[கன மீட்டர்]] (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.
 
"https://ta.wikipedia.org/wiki/சுற்றோட்டத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது