"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

989 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
எத்தியோப்பியா, சோமாலியாவைத் தவிர சகாரா உட்பகுதி ஆப்பிரிக்காவில் கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரை சக்கரம் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் ஐரோபியர் அங்கு குடியேறியதுமே நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.
 
ஆரைச் சக்கரங்கள் அண்மையில் தான் புனையப்பட்டன. இதனால் வண்டிகளின் எடை குறைந்தது. எனவே, வண்டிகளை வேகமாக ஓட்ட முடிந்தது. வடமேற்கு இந்தியாவின் சிந்துவெளி நாகரிகத்தில், வரிகள் இட்ட களிமண்ணால் ஆகிய பொம்மைச் சக்கர வண்டிகள் கண்டெடுக்கப்பட்டன, இந்த வரிகள் பொறுக்காகவோ வண்ணத்தால் தீட்டப்பட்டோ அமைந்துள்ளன. இவை ஆரைகளைக் குறிக்கலாம் எனக் கருதப்படுகிறது.<ref>Ghosh, A. (1989). [https://books.google.com/books?id=Wba-EZhZcfgC&printsec=frontcover&hl=it#v=onepage&q=wheel&f=false An Encyclopedia of Indian Archaeology]. New Delhi: Munshiram Manoharlal. p.337; Rao, L.S. (2005–06). The Harappan Spoked Wheels Rattled Down the Streets of Bhirrana, District Fatehabad, Haryana. “Puratattva” 36. pp.59–67.</ref>மேலும் எழுத்து இலச்சினையிலும் ஆரையொத்த வடிவக் குறியீடு உள்ளது<ref>காண்க [http://www.harappa.com/indus/90.html Molded tablet] and [http://www.harappa.com/indus/27.html Bull seal], Harappa.</ref> இது கி.மு மூன்றாம் ஆயிரத்தைச் சேர்ந்ததாகும். கி.மு 2000 அளவில் மிகப்பழைய ஆரை மரச்சக்கரங்கள் ஆந்திரனோவோ பண்பாட்டில் கிடைத்துள்ளன. விரைவில் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குக் காக்காசசு வட்டாரக் குதிரைப் பண்பாடுகளில் ஆரைச் சக்கரம் பூட்டிய போர்த்தேர்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன.இவர்கள் நடுவண் தரை நாடுகளுக்குச் சென்று அம்மக்களுடன் கலந்தனர். மினோவன் நாகரிகத்தின் ஓங்கல் அங்கே குன்றியதும் ஏதென்சும் சுபார்ட்டாவும் எழுச்சி பெற்று முந்து செவ்வியல் பண்பாட்டை உட்கவர்ந்து செவ்வியல் கிரேக்கப் பண்பாடு எழவும் இவர்கள் காரணமகியுள்ளனர். கெல்டிக் தேர்களில் அவர்கள் சக்கரத்தின் பருதியில் இரும்பு விளிம்பை கி.மு முதல் ஆயிரத்தில் அறிமுகப்படுத்தினர்.
 
[[File:India - Kanchipuram - 023 - chariot unveiled for upcoming festival (2507526057).jpg|thumb|left|கோயில்தேரின் எடைமிகுந்த திண்மச் சக்கரம். முன்னணியில் சாலையில் உள்ள ஆரைகள் பூட்டிய சக்கரங்கள் உள்ள மிதிவண்டியும்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2318741" இருந்து மீள்விக்கப்பட்டது