மின்தூண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
மின்தூண்டியானது அதன் [[தூண்டம்|மின்தூண்டல்]] அளவினால் வகைகுறிக்கப்படும். இது மின்தூண்டியால் உருவாக்கப்படும் மின்னழுத்தத்துக்கும் அதனூடு பாயும் மின்னோட்டத்தின் மாறல் வீதத்துக்குமிடையிலான விகிதத்தினால் தரப்படும். பன்னாட்டு அளவீட்டு முறைமையின்படி மின்தூண்டலின் அலகு என்றி (H) ஆகும். வழமையாக மின்தூண்டிகளின் அளவுகள் 1 µH (10<sup>−6</sup>H) யிலிருந்து 1 H வரை மாறுபடும். பல மின்தூண்டிகள் இரும்பு அல்லது பெரைட்டு போன்றவற்றாலான காந்த அகணியைக் கொண்டிருக்கும். இதன்மூலம் மின்தூண்டியின் காந்தப்புல அளவு அதிகரித்து மின்தூண்ட அளவும் அதிகரிக்கும். தடையி மற்றும் கொள்ளளவி ஆகியவற்றைப் போல் மின்தூண்டியும் மின்னணுச் சுற்றுக்களை உருவாக்கப் பயன்படும் செயலறுநிலை நேரியல் மின்சுற்று மூலமாகும். மின்தூண்டிகள் பெரும்பாலும் ஆடலோட்ட மின்னணு உபகரணங்களிலும், குறிப்பாக வானொலி உபகரணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை மின்சுற்றுக்களில் ஆடலோட்ட மின்னோட்டத்தை தடுத்து நேரோட்ட மின்னோட்டத்தை மட்டும் உள்வாங்க அனுமதிக்கும். இவை மின் வடிகட்டிகளில் வெவ்வேறு மீடிறன் கொண்ட சமிக்கைகளைப் பிரித்தெடுக்கும் தேவைக்க்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வானொலி மற்றும் தொலைக்காட்சி வாங்கிகளில் இசைவாக்கல் சுற்றுக்களில் மின்தூண்டிகளும் கொள்ளளவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
 
== கணித விவரிப்பு ==
கடத்தியொன்றினூடாகப் பாயும் மின்னோட்டமானது அதனைச் சூழ ஒரு காந்தப்புலத்தை உருவாக்கும். எனவே, மின் தூண்டியொன்றின் குறுக்குவெட்டுப்பரப்புக்கு ஊடான ஏதேனுமொரு மின்னோட்ட மாறல் அக் கடத்தியில் ஒரு எதிர் மின்னியக்கவிசையை உருவாக்கும். மின்தூண்டியின் செயற்பாட்டை வரையறுக்க மின்தூண்டம் (''L'') பயன்படுத்தப்படுகிறது. இது எதிர்மின்னியக்கவிசை அல்லது அதற்குரிய காந்தப்பாய மாற்றம் (<math>\Phi</math>) மற்றும் அதற்குரிய மின்னோட்டம் (''i'') என்பவற்றினால் தரப்படும்.<ref name="Singh">{{cite book
| last = Singh
| first = Yaduvir
| title = Electro Magnetic Field Theory
| publisher = Pearson Education India
| date = 2011
| location =
| pages = 65
| url = https://books.google.com/books?id=0-PfbT49tJMC&pg=PA65&dq=inductance
| doi =
| id =
| isbn = 8131760618}}</ref><ref name="Wadhwa">{{cite book
| last = Wadhwa
| first = C. L.
| title = Electrical Power Systems
| publisher = New Age International
| date = 2005
| location =
| pages = 18
| url = https://books.google.com/books?id=Su3-0UhVF28C&pg=PA18&dq=inductance
| doi =
| id =
| isbn = 8122417221}}</ref><ref name="Pelcovits">{{cite book
| last = Pelcovits
| first = Robert A.
| authorlink =
|author2=Josh Farkas
| title = Barron's AP Physics C
| publisher = Barron's Educational Series
| date = 2007
| location =
| pages = 646
| url = https://books.google.com/books?id=yON684oSjbEC&pg=PA646&dq=inductance
| doi =
| id =
| isbn = 0764137107}}</ref><ref name="Purcell">{{cite book
| last = Purcell
| first = Edward M.
| authorlink =
|author2=David J. Morin
| title = Electricity and Magnetism
| publisher = Cambridge Univ. Press
| date = 2013
| location =
| pages = 364
| url = https://books.google.com/books?id=A2rS5vlSFq0C&pg=PA364
| doi =
| id =
| isbn = 1107014026
}}</ref>
:::: <math>vL = N {d \Phi/ dt\over di} \,</math>
 
மின்சுற்றொன்றின் மின்தூண்டமானது அதன் மின்னோட்டப் பாதையின் வடிவ கணித அமைப்பிலும் அருகிலுள்ள பொருட்களின் காந்த உட்புகவிடுமியல்பிலும் தங்கியுள்ளது. மின்தூண்டியானது கம்பி அல்லது வேறு ஏதேனுமொரு கடத்தியொன்றினைப் பயன்படுத்தி, சுற்றினூடான காந்தப்பாயத்தை அதிகரிக்கும் விதமாக பெரும்பாலும் சுருளி வடிவில் உருவாக்கப்படும் சாதனமாகும். கம்பியினை சுருளாகச் சுற்றும்போது காந்தப்பாயக் கோடுகள் சுற்றோடு ஒன்றிக்கும் அளவு அதிகரித்து, காந்தப்புல வலிமை அதிகரித்து, மின்தூண்டல் அளவும் அதிகரிக்கும். முறுக்குகளின் எண்ணிக்கையோடு மின்தூண்டமும் அதிகரிக்கும். மேலும், சுருளின் வடிவம், முறுக்குகளின் வேறுபடுத்தல் போன்ற பல்வேறு காரணிகள் மின்தூண்டத்தின் அளவைப் பாதிக்கின்றன. இரும்பு போன்ற அயக்காந்த மூலப்பொருட்களாலான காந்த அகணியொன்றை சுருளினுள் இடுவதன் மூலமும் காந்தப்பாய அளவைக் கூட்டலாம். சுருளினால் வழங்கப்படும் காந்தப்புலத்தினால் அம்மூலப்பொருளில் தூண்டப்படும் காந்தமாக்கல் செயன்முறை காந்தப்பாய அளவை அதிகரிக்கக் காரணமாகிறது. அயக்காந்த அகணியின் உயர் உட்புகவிடுமியல்பு காரணமாக சுருளின் மின்தூண்டம் கிட்டத்தட்ட ஆயிரம் மடங்காக அதிகரிக்கும்.
மாறும் மின்னோட்டத்தின் விளைவாக உருவாகும் காந்தப் புலத்தை [[காந்த பாயம்]] கொண்டு அளவிடலாம். மாறும் காந்த பாயம், மொத்த சுருள்களின் எண்ணிக்கை, மின்னழுத்தம் ஆகியவற்றுக்கான தொடர்பை பின்வரும் சமன்பாடு எடுத்துரைக்கின்றது.
 
===இயைபுச் சமன்பாடு===
:::: மின்னழுத்தம் = சுருள் எண்ணிக்கை X மாறும் காந்த பாய விகிதம்
மின்தூண்டியொன்றினூடான மின்னோட்ட மாற்றம் காந்தப்பாய மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் அக்கடத்திக்குக் குறுக்கே மின்னழுத்தமொன்றைத் தூண்டும். பரடேயின் மின்தூண்டல் விதியின்படி, மின்சுற்றொன்றில் ஏற்படும் காந்தப்பாய மாற்றத்தினால் தூண்டப்படும் மின்னழுத்தமானது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்.<ref name="Purcell" />
:::: <math>v = N d \Phi/ dt</math>
:<math>v = {d\Phi \over dt} \,</math>
 
மேலே (1) இலிருந்து<ref name="Purcell" />
:<math>v = {d \over dt}(Li) = L{di \over dt} \,</math>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;(2)
 
எனவே, மின்தூண்டம் என்பது ஒரு குறித்த மின்னோட்ட மாற்றுவீதத்துக்கு உருவாகும் மின்னியக்கவிசையை அளக்கப் பயன்படும் ஒரு கணியமாகும். எடுத்துக்காட்டாக, 1 என்றி மின்தூண்டமுடைய மின்தூண்டியொன்று, தன்னூடே செக்கனுக்கு 1 அம்பியர் எனும் வீதத்தில் மின்னோட்டம் மாறுகையில், 1 வோல்ற்று மின்னியக்கவிசையை உருவாக்கும். இது பொதுவாக மின்தூண்டியொன்றை வரையறுக்கப் பயன்படும் சமன்பாடாகும்.
 
மின்தூண்டியின் இருமைச்சாதனம் கொள்ளளவியாகும். மின்தூண்டி சக்தியை காந்தப்புலத்தில் சேமிக்கும் அதேவேளை, கொள்ளளவி சக்தியை மின்புலத்தில் சேமிக்கும். கொள்ளளவியின் மின்னோட்ட-மின்னழுத்தத் தொடர்பானது, மின்தூண்டியின் தொடர்பில் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தத்தை இடமாற்றுவதன் மூலமும், கொள்ளளவம் Cயை மின்தூண்டம் Lஇனால் பிரதியிடுவதன் மூலமும் பெறப்படும்.
 
===லென்சின் விதி===
தூண்டிய மின்னியக்கவிசையின் திசையானது லென்சின் விதியினால் தரப்படும். இதன்படி தூண்டிய மின்னியக்கவிசையானது மின்னோட்ட மாற்றத்துக்கு எதிரான திசையில் தொழிற்படும். எடுத்துக்காட்டாக, மின்தூண்டியினூடான மின்னோட்டம் அதிகரிக்கையில், மின்னோட்டம் நுழையும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை நேராகவும், மின்னோட்டம் வெளியேறும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை மறையாகவுமிருக்கும். இதனால், இம்மின்னியக்கவிசை மேலதிக மின்னோட்டத்தை எதிர்க்கும். இம்மின்னியக்கவிசையை எதிர்க்கும் சக்தி மின்தூண்டியின் காந்தப்புலத்தில் சேமிக்கப்படும். இக்காலப்பகுதியில் மின்தூண்டியானது மின்னேற்றப்படுவதாகக் கூறப்படும். மின்னோட்டம் குறைகையில், மின்னோட்டம் நுழையும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை மறையாகவும், மின்னோட்டம் வெளியேறும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை நேராகவுமிருக்கும். இதனால், இம்மின்னியக்கவிசை மேலதிக மின்னோட்டத்தை ஆதரிக்கும். காந்தப்புலத்திலுள்ள சக்தியானது மின்சுற்றுக்கு திருப்பப்படும். இக்காலப்பகுதியில் மின்தூண்டியானது மின்னிறக்கப்படுவதாகக் கூறப்படும்.
 
===இலட்சிய மற்றும் உண்மை மின்தூண்டிகள்===
<!-- NB. Section header used in redirects to this page -->
மின்சுற்றுக் கொள்கையில், மின்தூண்டிகள் மேலுள்ள கணிதத்தொடர்பு (2)ஐ சரியாகப் பின்பற்றும் சாதனமாகக் கருதப்படும். ஒரு இலட்சிய மின்தூண்டியானது, மின்தூண்டத்தை மட்டுமே கொண்டிருக்கும். அது மின்தடையையோ கொள்ளளவத்தையோ கொண்டிருக்காது. எனவே, இது சக்தியை விரயமாக்காது. எனினும், உண்மை மின்தூண்டிகள் இலட்சிய நடத்தையிலிருந்து விலகிச்செல்லும். அவை தடையையும் (கம்பியின் தடை மற்றும் அகணியின் சக்தி விரயம் காரணமாக), கொள்ளளவத்தினையும் (கம்பிச்சுற்றுக்களுக்கிடையிலான மின்புலம் காரணமாக) கொண்டிருக்கும். உயர் மீடிறன்களில், இக்கொள்ளளவம், மின்தூண்டியின் நடத்தையைப் பாதிக்கும். குறித்த சில மீடிறன்களில் இம் மின்தூண்டிகள் பரிவுச் சுற்றுக்களாகத் தொழிற்பட்டு சுயபரிவுச் சுற்றுக்களாக மாறும். பரிவு மீடிறனுக்கு மேலுள்ள மீடிறன்களில் கொள்ளளவ மாறுமின்னெதிர்ப்பு செல்வாக்கு மிகுந்ததாக மாறும். உயர் மீடிறன்களில், புறணி விளைவு மற்றும் அண்மை விளைவு போன்றவற்றால், சுருளின் தடை விரயம் அதிகரிக்கும்.
 
அயக்காந்த அகணியுடனான மின்தூண்டிகள், அகணியில் உருவாகும் பின்னிடைவு மற்றும் சுழிப்போட்டம் என்பன காரணமாக மேலதிக சக்தி விரயத்தைக் கொண்டிருக்கும். இவ் விளைவு மீடிறனுடன் அதிகரிக்கும். உயர் மின்னோட்டங்களில், அகணியில் காந்த நிரம்பல் ஏற்படுவதனால் உருவாகும் ஒருபடியல்லாத்தன்மை காரணமாக, மின்தூண்டியின் இலட்சிய நடத்தை மாறுபடும். மின்தூண்டியானது, அதன் அருகிலுள்ள வெளி அல்லது மின்சுற்றுக்கு மின்காந்த சக்தியை கதிர்ப்பதன் மூலமோ அல்லது, ஏனைய சுற்றுக்களிலிருந்து வரும் மின்காந்தக் கதிர்ப்பை உறிஞ்சுவதன் மூலமோ மின்காந்தத் தலையீட்டை உருவாக்கும். ஆகவே, பிரயோகப் பயன்பாடுகளில் இக்காரணிகள் முக்கியத்துவமிக்கதாக விளங்கும்.
 
== நுட்பியல் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்தூண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது