சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
 
==சிலுவைப் போரின் விளைவுகள்==
{{Confusing}}
* எருசலேமை மீட்பதில் சிலுவைப் போர் வீரர்கள் தவறிவிட்டனர். எனினும், சிலுவைப் போர்களினால் ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் புதிய கிருத்துவ அரசாங்கம் உருவானது. பைசாண்டியரின் பெருமைகள் மற்றும் அதிகாரங்கள் குறையத் தொடங்கின. இழந்துபோனவற்றைத் திரும்பப்பெற திறனற்றவர்களாக இவர்கள் விளங்கினர். பால்டிக் கடற்கரையினர் மற்றும் ஜெர்மானியர் ஆகியோரை, சிலுவைப் போர்கள் வெகுவாக ஈர்த்து, அவர்களைக் கிருத்துவ மதத்தை விரைந்து பின்பற்ற வைத்தது. நிலமானியத் திட்டம் வீழ்ச்சியடைவதற்கு சிலுவைப் போர்களே முக்கியக் காரணிகளாகும். இராணுவச் சட்டங்களையும் இப்போர்கள் வெகுவாகப் பாதிப்படையச் செய்தன. அதேவேளையில், போப்பாண்டவரின் பெருமையும், அதிகாரமும், செல்வாக்கும் வளர்ச்சியுற்றது.
* தொலைதூரப் பயணங்களைக் கடந்து சிலுவைப் போர்கள் நடைபெற்றதன் விளைவாக, புதிய நிலவழிக் கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகமாயின. இதன் காரணமாக, போர்ச்சுக்கல், ஸ்பெயின் முதலான நாடுகளுக்குப் புதிய வணிக வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. கடல் வழிகள் கண்டுபிடிப்பிற்கான திசைக் காட்டும் கருவிகளின் பயன்பாட்டால் கப்பல் கட்டும் தொழில் வளர்ச்சி அடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது