இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
 
[[படிமம்:Taj Mahal in March 2004.jpg|thumb|left|முகலாயர்கள் காலத்து கட்டிடக்கலைக்கு உதாரணமாகப் பார்க்கப்படும் [[தாஜ்மஹால்]]]]
[[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] அடிபணிய வைத்ததன் மூலம், [[19ஆம் நூற்றாண்டு|19ஆம் நூற்றாண்டில்]], கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு [[ஐக்கிய இராச்சியம்|ஆங்கிலேயப் பேரரசிடம்]] போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேய [[ஏகாதிபத்தியம்|ஏகாதிபத்தியத்திற்கு]] எதிராக [[மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி]] தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற [[அகிம்சைப் போராட்டம்]] 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இசுலாமிய நாடான [[பாகிஸ்தான்|பாகிஸ்தானாகவும்]] பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு பாகிசுதானிடையே 1971-இல் [[வங்காளதேச விடுதலைப் போர்|உள்நாட்டுப் போர்]] மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாகிசுதான் [[வங்காள தேசம்]] என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது.
 
இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் தலைமை பலங்களில் சிலவாகும். பாகிசுதானுடனான [[காஷ்மீர் பிரச்சினை]], கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது