உரோமைப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
உரோமைப் பேரரசில் புதிய நகரங்கள் உருவாகின. இந்நகரங்கள் இடைக்காலத்தில் கைவினைத் தொழில் மற்றும் வாணிபம் ஆகியவற்றிற்கு மையமாகத் திகழ்ந்தன. தொடக்கக் காலத்தில் இப்பேரரசில் தோற்றுவிக்கப்பட்ட நகரங்கள் சிறியனவாகக் காணப்பட்டன. கைவினைக் கலைஞர்களின் பெருக்கத்தால் நகரங்களில் வியாபாரம் பெருமளவில் வளர்ந்தது. மேற்கு ஐரோப்பியர்கள் கீழை நாடுகளுடன் வாணிபம் மேற்கொள்ள, இத்தாலியின் அமைவிடம் ஏற்றதாக இருந்தபடியால் நகரங்கள் அதிகம் பயனடைந்து வளரக் காரணமாயின. ஜெனிவா, பிளாரன்ஸ், வியன்னா போன்ற நாடுகள் வர்த்தக மையங்களாக மாற்றம் பெற்றன. ஜெனிவா மற்றும் வெனிஸ் ஆகிய நகரங்கள் கடற்கரை நகரங்களாக அமைந்திருந்த காரணத்தால், மிலன், பிசா ஆகிய நகரங்கள் வாணிப வழித் தடங்களாக உருவாகின. நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலான நாடுகளிலுள்ள நகரங்கள் பலவும் துறைமுகங்களாகவும் வர்த்தக வாணிப மையங்களாகவும் வளர்ச்சிப் பெறத் தொடங்கின. இந்நகரங்கள் இடைக்கால ஐரோப்பிய நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் உகந்த இடங்களாகின.
 
==கல்வி வளர்ச்சி==
முந்தைய இடைக்காலத்தில் மக்களுக்குக் கல்வியைத் திருச்சபை அளித்தது. இலக்கியம், கணிதம், வேதாந்தம், தருக்கவியல் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டன. கல்வி கற்கும் மையங்களாக மடாலயங்கள் செயல்படத் தொடங்கின. பல பல்கலைக் கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன. அப்பல்கலைக் கழகங்கள் துறவிகளின் ஆளுகையின்கீழ் இயங்கி வந்தன. வேதாந்தம் மற்றும் தத்துவம் ஆகியவை கற்பித்தலில் முக்கியத்துவம் பெற்றன. வரலாறு, அறிவியல் பாடங்கள் கற்பிப்பதிலிருந்து விலக்கப்பட்டன. நூல்கள் கைகளால் எழுதப்பட்டன. '''போலக்னோ பல்கலைக்கழகம்
''' சட்டம் பயில்வதற்குப் புகழ்வாய்ந்ததாக அமைந்திருந்தது. ஸ்பெயின் பல்கலைக்கழகத்தில் அரேபியம், எபிரேயம் ஆகிய மொழிகள் கற்றுத்தரப்பட்டன. பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் பல்கலைக்கழகம் போல் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது.
 
=== உரோமப் பேரரசர்கள் சிலரின் படத்தொகுப்பு ===
"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது