"சிப்பிக்காளான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

364 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
 
:பாலீதின் தாளின் மேல் சுமார் இரண்டு செ.மீ கனத்தில் வைக்கோல் துண்டுகளை பரப்ப வேண்டும். அதில் ஒரு அடுக்காக காளான் வித்துக்களை தூவ வேண்டும். இரண்டாவது அடுக்காக அதன் மேல் வைக்கோலை பரப்பி காளான் வித்திட வேண்டும். இது போல் மூன்றாவது அடுக்காக வைக்கோலைப் பரப்பி வித்திட வேண்டும். இதன் மேல் மீதமிருக்கும் வைக்கோல் துண்டுகளைத் தூவி ஒரு பலகையால் அழுத்த வேண்டும். பின்னர் பாலிதீன் தாழை மடித்து கயிற்றால் கட்ட வேண்டும். இதுவே வித்திட்ட சதுரப் படுக்கை ஆகும்.
:ஓலை வேய்ந்த இடத்தில் தரையில் மணலை பரப்ப வேண்டும். நீர் தெளித்து தரையை குளிர்ச்சியாக்க வேண்டும். அந்த அறையில் வித்திட்ட படுக்கைகளை சமநிலையில் வரிசையாக வைக்க வேண்டும். 16 நாட்களில் காளான் வித்து முளைத்து வெள்ளை நிற நூலிழைப் போல படரும். இப்பஐவத்தில் நீர் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தரையில் நீர் தெளித்து அறையை குளிர்ச்சியாக வைக்க வேண்டும்.
:16 நாட்களுக்கு பிறகு பாலிதீன் தாழை வெளியே எடுத்து விட்டு படுக்கையை சாய்வாக தாங்கிகளை கொண்டு நிறுத்த வேண்டும். நாள்தோறும் பூவாளியால் காலையிலும் மாலையிலும் நீர் தெளிக்க வேண்டும். படுக்கையில் சிறு சிறு வெண்மையான மொட்டுக்கள் தோன்றும். பின்னர் அவை வளர்ந்து அடுக்கடுக்காக சிற்பிகள் போல் வளர்ச்சி அடையும். இந்த காளான்களை மூன்று முறை அறுவடை செய்யலாம். முதல் அறுவடைக்கு பிறகு இரண்டாவது , மூன்றாவது அறுவடை ஒருவார இடைவெளியில் செய்யலாம். சிப்பிக் காளானை உருளை வடிவ பாலிதீன் பைகளிலும் வளா்க்கலாம்.இதனை உருளைப் படுக்கை முறை என்பா். <ref name="ReferenceA">மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை 6 (ஆகஸ்டு 1983) " காளானும் ஒரு சத்துணேவ" உறையகம் 8.4.2</ref>
=== வெற்றிட உருளைப் படுக்கை முறை ===
:குளிர்ந்த நீரிலும் பிறகு கொதிக்கும் நீரிலும் நனைக்கப்பட்ட 5 கிலோகிராம் வைக்கோலினை,ஈரம் பிழிந்தெடுத்த பின் 5 முதல் 8 சென்டிமீட்டர் பருமனுள்ள பிரிகளாகத் திரித்து அவற்றை ஒரு உருளை வடிவமுள்ள பாத்திரத்தின் மீதோ அல்லது டின் மீதோ சுற்ற வேண்டும். சுற்றப்பட்ட பிரிகளின் மீது இரண்டு அல்லது மூன்று சுற்றுகளுக்கு ஒருமுறை சுற்றுகளின் உள்விளிம்பிலும், வெளிவிளிம்பிலும் காளான் விதையினைத் தூவ வேண்டும். அதன் மேல் கொள்ளுரவை அல்லது மரவள்ளி கிழங்கு மாவை தூவ வேண்டும். பின்னர் பிரிசுற்ற உபயோகப்படுத்தப்பட்ட உருளையினை எடுத்து விடலாம். எஞ்சி நிற்பதுதான் வெற்றிட உருளைப் படுக்கை இதை 300 கேஜ் கனம்கொண்ட பாலீத்தீன் தாளினால் மூட வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை பாலீத்தீன் தாளினை நீக்கி, தண்ணீரை பூவாளிகொண்டு தெளித்துவிட்டு பிறகு பாலித்தீன் தாளினால் முடிவிட வேண்டும். வித்திட்ட 12 முதல் 15 நாட்களில் காளான்கள் தோன்ற ஆரம்பிக்கும். காளான் குடை மாதிரி விரிந்த உடன் அறுவடைச் செய்யலாம். தட்பெவப்ப நிலை, சுற்றுபுறச் சூழல் நன்குள்ள போது மகசூல் நன்றாக இருக்கும்.<ref>மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை 6 (ஆகஸ்டு 1983) name=" காளானும் ஒரு சத்துணேவReferenceA" உறையகம் 8.4.2</ref>
=== உயர்ந்த படுக்கை முறை ===
:ஒரு மூங்கில் பலகையால் 25 செமீ உயரத்தில் மேடை அமைக்க வேண்டும்.வைக்கோலினை 6 முதல் 8 மணிநேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் கொதிக்கும் வென்னீரில் அமுக்கி வைக்கவேண்டும். வைக்கோலில் தங்கி உள்ள நீரை பிழிந்தெடுக்கவும். பின்னர் வைக்கோலினை 60 - 90 சென்டிமீட்டா் நீளமும் 18 -22 சென்டிமீட்டா் கனமும் கொண்ட கற்றைகளாகக் கட்ட வேண்டும். நான்கு வைக்கோல் கற்றைகளை மேடையில் வைக்க வேண்டும். இது முதல் அடுக்காகும். காளான் வித்துகளை 10 சென்டிமீட்டா் இடைவெளியில் வைக்க வேண்டும். விளிம்புகளிலிருந்து 3-5 சென்டிமீட்டா் இடைவெளி விட்டுவிட வேண்டும். பின்னா் கொள்ளுரவை அல்லது மரவள்ளி கிழங்கு மாவை காளான் வித்துக்களின் மீது தூவ வேண்டும். நான்கு வைக்கோல் கற்றைகளைக் கொண்டு முதல் அடுக்கிற்கு குறுக்காக இருக்குமாறு இரண்டாவது அடுக்கு அமைக்க வேண்டும்.இந்த அடுக்கிலும் காளான் வித்திடல் வேண்டும். பின்னா் கொள்ளுரவை அல்லது மரவள்ளி கிழங்கு மாவை காளான் வித்துக்களின் மீது தூவ வேண்டும். இரண்டாவது அடுக்கின் அடி விழிம்பிற்கு குறுக்காக வைக்கோல் கற்றைகளைக் கொண்டு மூன்றாவது அடுக்கு வைக்கப் படவேண்டும். மூன்றாவது அடுக்கின் மேலும் காளான் வித்திடல் வேண்டும்.கொள்ளுரவை அல்லது மரவள்ளி கிழங்கு மாவை காளான் வித்துக்களின் மீது தூவ வேண்டும். நான்காவது அடிக்கினையும் மேற்சொன்னபடி அமைக்கவேண்டும்.
:நான்காவது அடுக்கினை ஒரு மரப்பலகை கொண்டு அழுத்த வேண்டும்.படுக்கையின் நான்கு பக்கங்களிலும் பூவாளிகொண்டு தண்ணீரைத் தெளிக்க வேண்டும். தண்ணீா் அதிகமாக தெளிக்கக் கூடாது. பின்னா் படுக்கையினை சுற்றி ( 300 கேஜ் கனம்கொண்ட) பாலீத்தீன் தாளினால் மூட வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை பாலீத்தீன் தாளினை நீக்கி, தண்ணீரை பூவாளிகொண்டு தெளித்துவிட்டு பிறகு பாலித்தீன் தாளினால் முடிவிட வேண்டும். வித்திட்ட 12 முதல் 15 நாட்களில் காளான்கள் தோன்ற ஆரம்பிக்கும். காளான் குடை மாதிரி விரிந்த உடன் அறுவடைச் செய்யலாம். மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை தொடா்ந்து அறுவடை செய்யலாம். 8 முதல் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மூன்றாவது அறுவடை செய்யலாம். <ref>மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை 6 (ஆகஸ்டு 1983) name=" காளானும் ஒரு சத்துணேவReferenceA" உறையகம் 8.4.2</ref>
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:உணவுவகைத் தாவரங்கள்]]
[[பகுப்பு:ஆசிரியர் பயிற்சி கட்டுரைகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2321319" இருந்து மீள்விக்கப்பட்டது