"கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,700 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
போப்பாண்டவரின் தலைமையின்கீழ் செயல்பட்டுவந்த கிறித்துவ திருச்சபையானது தொடக்கத்தில் மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்று விளங்கியது. இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட நிலமானிய முறையில் திருச்சபையானது ஒரு நிலமானிய நிறுவனமாக வளர்ந்து, எண்ணற்ற நிலத்தையும் வளத்தையும் கொண்டு காணப்பட்டது. அதேவேளையில், போப்பாண்டவர்கள் அரசியல் செல்வாக்குகள் அதிகம் பெற்று, அரசியல் நடவடிக்கைகளில் தலையீடு செய்தனர். மேலும், தங்களது ஆன்மீகப் பணியையும் புறக்கணித்து வந்தனர். குருமார்களுடன் சேர்ந்து ஆடம்பர வாழ்க்கையில் தம் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினர். கி. பி. பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆறாம் அலெக்சாண்டர், இரண்டாம் ஜூலியஸ், பத்தாம் லியோ முதலான போப்பாண்டவர்கள் திருச்சபையின் மதிப்பு, கண்ணியம் ஆகியவற்றைச் சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
 
மறுமலர்ச்சி இயக்கம் மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்திருந்தது. விவிலியத்தை அவர்கள் வாசிக்கத் தொடங்கியிருந்தனர். அதன் காரணமாக, திருச்சபை மற்றும் குருமார்களின் செயற்பாடுகள் புனித நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுவதை மக்கள் உணரத் தொடங்கினர். சீர்திருத்த இயக்கம் உருவாவதற்கு முன்னரே, பல்வேறு இலக்கியச் சிந்தனையாளர்கள் திருச்சபையில் காணப்பட்ட ஆடம்பர வாழ்க்கை மற்றும் மூட நம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்க்கத் தொடங்கியிருந்தனர்.<ref>{{cite book | title=வரலாறு பன்னிரண்டாம் வகுப்பு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2016 | pages=ப. 174}}</ref>
 
===சீர்திருத்தவாதிகளின் நிலை===
ஆங்கிலேயரான ஜான் வைகிளிப் (1330 - 1384) என்னும் சிந்தனையாளர் போப்பாண்டவரின் அதிகாரத்தையும் பிற குறைபாடுகளையும் விமர்சனம் செய்தார். மேலும், விவிலியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதனால், இவர் '''சமய சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி''' எனப் போற்றப்பட்டார்.
 
அதுபோல், எராஸ்மஸ் (1466 - 1536) என்பவர், தன்னுடைய '''முட்டாள்களின் கப்பல்''' என்னும் புத்தகத்தில் மத குருமார்கள் கடைப்பிடித்துவந்த மூடப்பழக்கவழக்கங்களைக் கண்டித்து எழுதியிருந்தார். இந்த நூல் கி. பி. 1509 இல் பதிப்பிக்கப்பட்டது.
 
போஹிமியாவைச் சேர்ந்த ஜான் ஹஸ் (1369 - 1415) என்பார் திருச்சபை சீர்திருத்தத்திற்காக அரும்பாடுபட்டார். ஹஸ்சின் எழுத்துகள் திருச்சபையினரால் கடும் கண்டனத்திற்கு ஆளாகின. மேலும், அவர் திருச்சபைக்கு எதிரான குற்றங்களுக்காக உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டார். இத்தகைய முன் முயற்சிகள் பதினாறாம் நூற்றாண்டு பிற்பட்ட சமய சீர்திருத்த இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கின.<ref>{{cite book | title=வரலாறு பன்னிரண்டாம் வகுப்பு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2016 | pages=பக். 174 - 175}}</ref>
 
==முடிவும் தாக்கமும்==
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2322980" இருந்து மீள்விக்கப்பட்டது