கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
போஹிமியாவைச் சேர்ந்த ஜான் ஹஸ் (1369 - 1415) என்பார் திருச்சபை சீர்திருத்தத்திற்காக அரும்பாடுபட்டார். ஹஸ்சின் எழுத்துகள் திருச்சபையினரால் கடும் கண்டனத்திற்கு ஆளாகின. மேலும், அவர் திருச்சபைக்கு எதிரான குற்றங்களுக்காக உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டார். இத்தகைய முன் முயற்சிகள் பதினாறாம் நூற்றாண்டு பிற்பட்ட சமய சீர்திருத்த இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கின.<ref>{{cite book | title=வரலாறு பன்னிரண்டாம் வகுப்பு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2016 | pages=பக். 174 - 175}}</ref>
 
==இங்கிலாந்தில் சமய சீர்திருத்தம்==
இங்கிலாந்து மன்னர் [[எட்டாம் ஹென்றி]] தொடக்கத்தில் [[மார்டின் லூதர்கிங்]]கிற்கு எதிரான போப்பாண்டவரை ஆதரித்து வந்தார். இதன்காரணமாக, அவர் '''சமயக் காவலர்''' எனப் போப் பத்தாம் லியோவால் போற்றப்பட்டார். இருவருக்குமான இந்த நல்லுறவு அதிக காலம் நீடிக்காமல் முறிந்துபோனது. எட்டாம் ஹென்றி அரசியை மணவிலக்கு செய்துவிட்டு, ஆன்பொலின் என்பவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இத்திருமணத்திற்கு போப் அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து, பாராளுமன்றத்தின் உதவியை நாடினார் ஹென்றி. இவரது இந்த நடவடிக்கைக் காரணமாக, இங்கிலாந்து பாராளுமன்றம் [[ஆதிக்கச் சட்டம்]] ஒன்றைக் கொண்டு வந்தது. இதன்படி, மன்னர் இங்கிலாந்துத் திருச்சபைக்கும் தலைவர் என்று அறிவிக்கப்பட்டார். போப்பாண்டவரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட இந்த புதிய திருச்சபை '''ஆங்கிலிக்கத் திருச்சபை''' என்றழைக்கப்பட்டது. எட்டாம் ஹென்றி கத்தோலிக்கக் கோட்பாடுகளில் எந்தவித முக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆறாம் எட்வர்டு ஆட்சிக் காலத்தில்தான், இத்திருச்சபை புரோட்டஸ்டன்ட் சமயத்தைப் பின்பற்றத் தொடங்கியது. மேலும், வழிபாட்டு விதிமுறைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன.<ref>{{cite book | title=வரலாறு பன்னிரண்டாம் வகுப்பு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2016 | pages=ப. 177}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவச்_சீர்திருத்த_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது